ஒரு முற்றிலுமான விடுதலை Jeffersonville, Indiana, USA 59-0712 1இந்த காலையில் என்ன கூறுவது என்று அறியாமல் இருந்தேன். அங்கு சகோதரன் ஈகனுடன் பின்னால் அமர்ந்திருந்த போது, சகோதரர் நெவில் ஒன்றைக் கூறினவராய் என்னையே பார்த்துக் கொண்டிருந்ததால், நான் சகோதரர் ஈகனிடம் “அவர் என்னையா அழைக்கிறார்”? என்று கேட்டேன். ''ஆம்உங்களைத் தான்“ என்று கூறினார். எனவே இங்கு சிலவற்றை கூறும்படி இந்தக் காலையில் இங்கே இருக்கிறேன். இந்த மின் விசிறியானது பேசும்போது சத்தத்தை வெறுமென வெளியே இழுக்கிறதாக காணப்படுகிறது. அது பார்ப்பதற்க்கு மின்விசிறியானது எல்லா சத்தத்தையும் தன் பக்கமாக எடுத்துக்கொள்கிறதாக இருக்கிறது. அங்கே அந்த ஸ்திரிக்காக தொலைபேசியின் மூலமாக ஜெபிக்க இருந்தபோது... சாட்சியைக் கேட்டுக்கொண்டிருந்தேன். டாக்டர் மாரிஸனின் மனைவியினிடத்தில் செய்தியை பெற்ற அந்த நபர் அழைக்கவேண்டிய அந்த பட்டணத்தின் இடத்தை குறிப்பிட மறந்துவிட்டார். ஆனால், உங்களுடைய எல்லா ஜெபத்தின் மூலமாகவும் என்னுடைய ஜெபத்தின் மூலமாகவும் நான் என்ன செய்தேன் என்று உங்களுக்கு சொல்லட்டும் நான் என் கரங்களை தொலைபேசியின் எண்கள் மேல் வைத்த வண்ணமாக பரிசுத்த ஆவியினிடத்தில் அந்த ஸ்திரியினிடத்தில் செல்லுமாறு கேட்டேன். அவர் நம்மை எப்படியாக... அதே விதமாகதான் அவரும் கேட்கிறார் என்று நான் நினைக்கிறேன். பாருங்கள்‚ அதன் பிறகு அதை அங்கு கீழே வைத்தேன். அந்த வழியில்தான் நிகழவேண்டும் என்று தேவன் விரும்பினார். பாருங்கள்‚ அது அந்தவிதமாக நிகழும்போது நன்மைக்காகவே முடியும். 2அதன்பிறகு, நான் அங்கிருந்தபோது சாட்சிகளைக் கேட்டுக் கொண்டிருந்தேன். யாரோ ஒருவர் என்னிடத்தில் சகோதரி ரூக், அவர்களைக் குறித்து கூறினார்கள். அது சகோ. நெவில் அந்த ஸ்திரிக்கு மனசிதைவு போல் ஏதோ ஒன்று ஏற்ப்பட்டிருக்கிறது என்று கூறினார் என்று நினைக்கிறேன். தேவன் தம்முடையவர்களை அறிந்திருக்கிறார். அவர் அவர்களை குறித்ததான எல்லாவற்றையும் அறிந்ததிருக்கிறார் என்பதை நினைவில் கொண்டு இந்த ஸ்திரிக்காக அவரைப் பற்றிப்பிடித்துக் கொள்வோம். 3அங்கு பின்னால் இருக்கிற உங்களுக்கு சரியாக கேட்க முடிகிறதா? உங்களுக்கு சரியாகக் கேட்காத பட்சத்தில் இங்கு சில இருக்கைகள் காலியாக இருக்கின்றன. நீங்கள் விரும்பினால் உங்கள் இருக்கைகளை மாற்றி அமர்ந்துக் கொள்ளலாம். இதுதான் முக்கியமான ஒலிவாங்கியா (Mike) என்று பார்க்கலாம்? (ஒரு சகோதரன் இல்லை ஐயா என்றுகூறுகிறார் - ஆசிரியர்.) சரி. அதை இன்னும் சற்று அருகாமையில் கொண்டு வர முடியுமா என்று நாம் பார்ப்போம். அதை இந்தப் பக்கத்தில் கொண்டு வந்தால் எப்படி இருக்கும் ஜீன்? அது சற்று நன்றாக இருக்கும். சில நேரங்களில் நான் சற்று கரகரப்புத் தொண்டை உடையவனாக ஆகிவிடுகிறேன். நான் சமீபகாலமாக தொடர்ந்து பிரசங்கித்துக் கொண்டு வருகிறேன். அதுசற்று பரவாயில்லையா? அதை உங்களால் சரியாக கேட்க முடிகிறதா? 4நாம் நிச்சயமாகவே இந்தக் காரியங்களைக் குறித்து ஜெபத்தில் நினைவு கூறுவோம். மேலும் நாங்கள் அங்கு கொண்டிருந்த மகிமையான கூட்டத்தை குறித்த அறிவிப்பை அறிவிக்க விரும்புகிறோம். நான் சகோதரி ரூக் அவர்களையா நோக்கிப் பார்த்துக் கொண்டிருக்கின்றேன்? (இல்லை என்கிறார் ஒரு சகோதரர்- ஆசிரியர்) பின்னால் இருக்கிற ஸ்திரி பார்ப்பதற்க்கு அவரைப் போலவே இருப்பதால் அவர்தான் என்று நினைத்தேன். நான் நிச்சயமாக இவரை பார்த்து இன்னும் ஒருவரை பார்ப்பது போல பார்கிறேன் என்று சொல்லவில்லை. நான் அவர்களைப் போல் இருக்கின்ற ஒருவரைப் பின்னால் இருப்பதை பார்க்கிறேன். அவர்கள் பரிசுத்த எட்வர்டு மருத்துவ மனையில் இருக்கிறார்கள். 5ஆகவே, நாங்கள் க்ளீவ்லாண்டு, டென்னஸ்ஸிலும் மற்றும் கலிபோர்னியாவிலும் மகிமையான கூட்டங்களை பெற்றிருந்தோம். தேவன் தாமே அபரிவிதமாய் ஆசீர்வதித்து, அனேக காரியங்களை அங்கு செய்தார். அதற்காக நாங்கள் மகிழ்ச்சி அடைக்கிறோம். நிச்சயமாகவே நம்முடைய சொந்த மக்களிடத்திற்க்கு திரும்பி வந்து, தேவனுடைய நன்மைகளையும், அவருடைய இரக்கங்களையும் குறித்து அறிக்கைகளை வெளியிடுவதற்காய் மிகவும் மகிழ்ச்சி அடைக்கிறோம். அந்த விதமாகதான் அவர்கள் வேதாகமத்திலும் செய்தார்கள். நான் சகோதரன் நெவில், இல்லை சகோதரன் பீலர் அவர்களுடைய ஜெபத்தை பாராட்டிக் கொண்டிருந்தேன், அவர் தேவனிடத்தில் எவ்விதமாய் மக்களுக்கு உதவும்படிக்காகவும், இரக்கத்தைப் பெறும்படிக்காகவும் ஜெபித்துக் கொண்டிருந்தார். மற்றும் நடைபெறுகின்ற ஒவ்வொரு காரியத்தையும் நாம் சற்று தொடர்ந்து பார்ப்போமேயாகில், நீங்கள் எப்பொழுதுமே, அதைக் குறித்ததான அசலான ஏதோவொன்றை நீங்கள் கண்டுபிடிப்பீர்கள். அதன்பின் சகோ. நெவில் சபையின் காணிக்கையை ஆசீர்வதிக்கும்படிக்கு டீக்கன்மார், மற்றவர்களையும் மேலே மேடைக்கு அழைத்து அவர் தேவனிடத்தில் அவர்களைக் குறித்து ஜெபத்தில் பேசினதையும் ,அவர்கள் எப்படியாக ஒருவருக்காக ஒருவர் ஜெபித்ததையும் நான் கேட்டேன். ஒரு மேய்ப்பனானவர் தம்முடைய டீக்கன்மார்களுக்காக ஜெபிப்பதும், டீக்கன்மார்கள் தம்முடைய மேய்ப்பருக்காய் ஜெபிக்கிறதுமான காரியங்களைக் குறித்து நான் கேட்கும்போது அது எனக்கு மிகவும் நன்மை அளிப்பதாய் உள்ளது. இவ்விதமாய் சபையானது ஒரு ஒற்றுமைக்குள்ளாக போகும் போது; நல்லது, அங்கு ஏதோ ஒரு காரியமானது நடக்க ஆயத்தமாயிருக்கிறது. அந்த விதமான ஒழுங்கில் தான் சபையானது இருக்க வேண்டியதாய் உள்ளது. மேலும் இந்தக் காரியம் எனக்கு பேசும்படிக்கான ஒரு பொருளை குறித்த யோசனையைக் கொடுத்தது. நான் காதேஷின் ஆசீர்வாதங்களைக் குறித்தும், ஒற்றர்களின் அறிக்கையைத் தள்ளிப் போடுவதைக் குறித்ததுமான காரியங்களை பற்றி பேசுவதற்காய் எத்தனித்துக் கொண்டிருந்தேன், ஆனால் அதன் பிறகுவேறு ஒரு காரியத்தைக் குறித்து பேசுவதற்காய் என்னுடைய மனதை மாற்றிக்கொண்டேன். 6மேலும், சுகமாக்குதலைக் குறித்து நான் ஒரு சிறிய சாட்சியை உடையவனாய் அதை உங்களிடத்தில் பகிர்ந்துக் கொள்ள விரும்புகிறேன். நான் என் மகன் பில்லியை அங்கே பின்னால் பார்ப்பேன் என்ற நம்பிக்கையோடு இருந்தேன். ஆனால், அவனோ அதை தன்னுடைய பாக்கெட்டிற்குள் வைத்திருக்கிறான். மேலும் பில்லி முன் இருந்ததைக் காட்டிலும் இப்பொழுது கூட்டங்களில் தேறினவனாய் இருக்கிறான். அவன் பதற்றமுடையவனாயும், தடுமாறினவனாயும் இருந்து மக்களைப் பார்த்து, “ஓ, அங்கே போய் உட்காருங்கள், அங்கே போய் உட்காருங்கள், நான் உங்களுக்கு ஜெபஅட்டையைக் கொடுப்பேன் என்று சொல்வான்”, ஆனால் சமீபகாலமாக நான் அவனை கவனித்தபோது கூட்டங்களுக்கு வருகிற மக்களுடைய நிலைமையை கண்டு அவன் வருத்தப்படுகிறான். அவனிடத்தில் ஜெப அட்டை இல்லாதபட்சத்தில் நான்வந்து ஜெபிக்கும்படியாக அவர்களை ஒரு அறையில் தங்க வைக்கிறான். 7அந்த விதமாக கடந்த முறை சிகாகோவில் ஒரு சம்பவம் நடந்தது. அவன் இங்கு, உள்ளே வருவானாகில், அதை குறித்தான கடிதத்தை உங்களுக்கு படித்து காட்ட விரும்புகிறேன். இதோ அது இவ்விதமாக இருந்தது. அது நிரூபிக்கப்பட்ட ஒரு காரியம். இம்மட்டும் அவனை பார்க்கவில்லை. அவனுக்கு நான் இந்தக் காலைப் பொழுதில் இங்கே வருவேன் என்றும், அந்தக் கடிதம் எனக்குத் தேவைப்படும் என்றும் அவனுக்குத் தெரியாது. நான் அனேக வியாதிகளைக் குறித்து நினைத்துக் கொண்டிருக்கையில் அதைப் பற்றினதான சிந்தனை எனக்கு வந்தது. நான் செய்திதாளை வாசித்து கொண்டிருந்தேன். (நான் அதை படிக்கவில்லை. ஆனால் என்னிடம் இப்படியாய் சொல்லப்பட்டது) அதாவது செய்திதாள்களில் ஓரல்ராபர்ட்ஸ் ஜெபித்து சர்க்கரை வியாதியுற்ற ஒரு பெண் மரித்து போனதை விமர்சனம் செய்தார்கள். நான் ஒரு அமெரிக்ககுடிமகனாக சட்டத்துக்கும் மற்றும் அதிகாரத்தில் உள்ளவர்க்கும் செவிகொடுக்க விரும்புகிறேன். ஆனால் இவர்கள் செய்தது நியாயமானதாக இல்லை. மருத்துவர்களால் கைவிடப்பட்டு ஓரல் ராபர்ட்ஸ் ஜெபித்ததின் மூலம் குணமடைந்த எல்லாவற்றையும் செய்திதாள்கள் பிரசுரிக்க சித்தமுடையதாய் இருக்குமா என்று நான் ஆச்சரியப்படுகிறேன், அதை அவர்கள் உடனடியாக வேறுவிதமாக மாற்றிவிடுவார்கள் என்று நான் ஆச்சரியப்படுகிறேன்‚ பாருங்கள்‚ அதை அவர்கள் பிரசுரிக்கமாட்டார்கள். அது பிசாசானவன் அவர்கள் அவ்விதமாக செய்யும்படிக்கு குழப்பத்தை உண்டாக்கி இருக்கிறான் என்றும், தேவன் அதை அனுமதித்திருக்கிறார் என்றும், நியாயத் தீர்ப்பின் நாளிலே அவர்கள் அதற்காக பதிலளிக்க வேண்டியவர்களாய் இருக்கிறார்கள் என்றும் நான் நினைக்கிறேன். ஆனால், மரித்துக் கொண்டிருந்ததான ஆயிரக்கணக்கானவர்களுக்கு ஓரல்ராபர்ட்ஸ் ஜெபித்து அவர்கள் நலமாக இருப்பதை நான் அறிவேன். 8ஆகையால் பாருங்கள் அதைக் குறித்து அவர்கள் நியாயமுடையவர்களாய் இருக்கவில்லை. அவர்கள் தங்களுக்கு வேண்டியதான குறைகூறுதலை வெளியிடுவார்களே அன்றி, மற்ற காரியத்தை வெளியிடமாட்டர்கள். இப்பொழுது, செய்தித் தாள் என்பது மக்களுக்கு அன்றாடம் நடக்கின்றதான நிகழ்வுகளை அவ்வப்பொழுது அறிவிக்கவேண்டிய ஒன்றாய் உள்ளது. மேலும் மனிதர்கள் ஒருவருக்கொருவர் அக்கறை கொள்ளும் போது, ஒருவர் சுகமடையும் பொழுது அதாவது உண்மையான சுகத்தைப் பெற்றுக் கொள்ளும் பொழுது, அமெரிக்க ஐக்கிய தேசத்தில் இருக்கிறதான ஒவ்வொரு செய்தித்தாளும் அந்தக் காரியத்தை பிரசுரிக்கவேண்டும். ஆனால் அதை செய்யும்படிக்கு நீங்கள் அவர்களுக்கு பணத்தை கொடுத்து பிரசுரிக்க சொன்னாலும் அதை செய்யமாட்டார்கள். இல்லை. நீங்கள் நியாயமான அப்படிப்பட்டவைகளை அங்கே எடுத்து செல்வீர்களாகில் அதைக் குறித்து அவர்கள் ஏளனம் செய்து, நகைத்து, உங்களை பரியாசம் பண்ணுவார்கள். இது எதை காண்பிக்கின்றதென்றால், இந்த தேசமானது நியாத்தீர்ப்புக்கு ஆயத்தமாய் இருக்கிறதென்று காண்பிக்கிறது. அது சரிதான். நிச்சயமாக ஒரு நியாத்தீர்ப்பு உண்டு. அதிலிருந்து தப்பித்துக் கொள்ளவழியே இல்லை. அவர்களே தங்கள் தலைகளின் மேல் அக்கினியை வரவழைத்துக் கொள்கிறார்கள். அவ்வளவாக அவர்கள் தங்களுடைய அடிப்படைக் கொள்கைகளில் வேறுப்பட்டு இருக்கிறார்கள். ஒரு செய்தித் தாளின் அடிப்படைக் கொள்கையானது நிகழ்கின்றதான நலமான அல்லது கெட்ட காரியங்கள் எதுவாக இருந்தாலும், அதை மக்களுக்கு அறிவிக்க வேண்டிய ஒரு ஊடகமாய் உள்ளது. ஆனால் அவர்கள் தங்களுடைய அடிப்படைக் கொள்கைகளுக்கு அப்பாற்பட்டவர்களாய் இருக்கிறார்கள். அவர்கள் அவ்விதம் தங்களுடைய அடிப்படைக் கொள்கைகளுக்கு அப்பாற்பட்டு இருக்கும் பட்சத்தில், அவர்கள் தாங்கள் செய்யவேண்டியதான நோக்கத்தை சரியாக செய்யமட்டார்கள். 9சபை காரியங்களிலும் அது அதே விதமாகவே தான் இருக்கின்றது. சபையானது தன்னுடைய அடிப்படைக் கொள்கையிலிருந்து விலகியிருக்கும் போது, அது ஒருபோதும் தம்முடைய பரிசுத்தவான்களுக்கு சரியான ஒரு ஊழியத்தை செய்ய முடியாது. நாம் ஒருமித்து ஒற்றுமையுடன் கூடி இருக்க வேண்டியவர்களாய் இருக்கிறோம். நாம் ஏகமனதுடனும், ஒருமித்த சிந்தை உடையவர்களாயும் இருக்க வேண்டும். அல்லாமல் வேதத்தின் அடிப்படைக் கொள்கைகளிலும் தேவன் சரியென்று கூறின காரியங்களிலும் ஏகமனதுடனும், ஒருமித்த சிந்தையுடனும் நாம் நிற்காத பட்சத்தில் தேவனுக்கும் அல்லது அவருடைய மக்களுக்கும் சேவை செய்யமுடியாது. நாம் எப்பொழுதும் அவைகளைக் கொண்டே ஜீவிக்கவேண்டும். 10பில்லி, சிகாகோவில் அந்த அறையில் இருந்ததபோது, யாரோ ஒருவர், ஒரு ஸ்திரீயானவள் நுரையீரல் புற்று நோயினால் மரித்துக்கொண்டிருந்த தன்னுடைய கணவனுடன், அங்கு அவனிடத்தில் வந்தார்கள். அவனுடைய மனைவியும் இளம்பிள்ளை வாதத்தினால் பாதிக்கப்பட்டு சக்கர நாற்காலியில் இருந்தவண்ணமாய், நுரையீரல் புற்று நோயினால் தம்மால் எழுந்து நிற்கக் கூட முடியாது இருக்கும் தன்னுடைய கணவனை கவனித்துக் கொண்டிருந்தாள். பில்லி அவரிடத்தில் இவ்விதம் கூறினான். “என்னை மன்னியுங்கள் ஐயா”, நான் உங்களுக்கு ஜெப அட்டையைக் கொடுப்பதற்கு மகிழ்ச்சி உடையவனாய் இருக்கிறேன், “ஆனால் உங்களுக்கு கொடுப்பதற்கு என்னிடத்தில் ஒரு ஜெப அட்டையும்விட்டு வைக்கப் பட்டிருக்கவில்லை” என்றுக் கூறினான். அதற்கு அவர், “நல்லது, எல்லாம் சரி, மகனே, அது பரவாயில்லை”, என்று கூறினார். “நாங்கள் எங்களால் இயன்ற மட்டும் இங்கு வருவதற்கு முயற்சி செய்தோம் ஆனால் அது எங்களால் கூடாமற் போயிற்று”. பில்லி அவர்களிடத்தில், “சரி, நீங்கள் இதை எப்படி செய்யவேண்டும் என்று நான் உங்களுக்குச் சொல்லட்டும்”. நான் போய் என் அப்பாவை அழைத்து வருவேன். “நான் என்னுடைய அப்பாவை உள்ளே கொண்டு வந்துவிட்டு, வெளியே கொண்டு செல்ல வேண்டியவனாய் இருக்கிறேன்”. 'நான் அவ்விதம் செய்யும்போது, நீங்கள் அவருடைய செய்தியைக்கேட்டு முடித்த மாத்திரத்தில், “நீங்கள் உங்கள் மனைவியுடன் நான் கடந்து செல்லவேண்டியதான அந்த சிறு அறைக்குள்ளாக வந்து இருப்பீர்களேயாகில், அப்பொழுது நான் அப்பாவை உங்களுக்காக ஜெபிக்கும் படிச் செய்வேன்” என்றான். ஓ, அவர் “அது உத்தமமானது மகனே. அது போதுமான நன்மையாய் இருக்கும்”. பாருங்கள்‚ ஒரு மனப்பான்மையாய் இருக்கிறது பாருங்கள்‚ 'போதுமான நன்மை. அதுஎனக்கு போதும்“, பாருங்கள்‚ 11அந்த இரவின்பொழுதிலே, பில்லி அவன் அங்கு திரும்பி சென்ற போது, அவர்தான் கூறினதற்கு மேலாக அங்கே நுரையீரலிருந்து இரத்தம் கசிந்துக் கொண்டிருந்ததான தன் மைத்துனரும், மற்றும் அங்கே குடல் புண்ணினால் வயிற்றில் இரத்தம் கசிந்துக் கொண்டிருந்த அவருடைய மைத்துனியும் அவர்களுக்கு உள்ளே வர உதவிசெய்யும் படிக்கு இவர்களும் உள்ளே வந்திருந்தார்கள். நீங்கள் இங்கு கவனிக்க வேண்டும், அந்த அறையானது முழுவதும் நிரம்பின ஒன்றாய் காணப்பட்டது, பாருங்கள்‚ இருந்த போதிலும், உள்ளே பிரவேசித்து அவர்களுக்காக ஜெபித்தோம். பின்னர் நாங்கள் தபால் மூலமாக ஒரு கடிதம் கிடைக்கப் பெற்றோம், அதில் நுரையீரல் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டிருந்த அந்த மனிதன் பரிபூரணமாய் சுகமடைந்து விட்டதாகவும்; சக்கர நாற்காலியில் வந்த அவருடைய மனைவியானவள், முன்பு இருந்தது போலவே, எழுந்து சாதாரணமாக நடமாடிக் கொண்டிருப்பதாகவும்; எலும்புருக்கி நோயினால் தன்னுடை நுரையீரல்களில் இரத்தம் கசிந்து கொண்டிருந்ததான அந்த மனிதன் முற்றிலும் நலமுடன் இருப்பதாகவும், குடல் புண்ணினால் பாதிக்கப்பட்டிருந்த அவருடைய மனைவியும் நலமாக இருப்பதாகவும் எழுதப்பட்டிருந்தது. அவர்கள் நால்வருமே நேரிடையாக சுகத்தைப் பெற்றுக் கொண்டார்கள்‚ செய்தித்தாள்கள் அதை பிரசுரிக்க சித்தமுடையதாய் இருக்குமா என நான் வியக்கிறேன், பாருங்கள்‚ ஓ, தேவனானவர் இன்னும் தேவனாகவே இருக்கிறார். அவர் வெறுமனே காரியங்களை அவருடைய சொந்த வழியில் செய்கிறவராக இருக்கிறார் மற்றும் அவர் மிகவும் நல்லவராக இருக்கிறார் என்பதையும் நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். அவர் தேவனாய் இருக்கிறார் என்பதை அறிந்துக் கொள்வதில் நாம் மிகவும் மகிழ்ச்சி உடையவர்களாய் இருக்கிறோம். 12நாங்கள் மற்றொருநாள் காலையில் எங்களுக்கு அறிமுகமான ஒரு சிறிய பிரசங்கியைக் குறித்து பேசிக்கொண்டிருந்தோம், அவர், சுற்றித் திரிந்து வியாதியஸ்தருக்காகவும் மற்றும் அனைத்து காரியங்களுக்காவும் ஜெபிப்பார். அவர் லூயிவில்லில் உள்ள மருத்துவமனையில் காச நோயினால் பிடிக்கப்பட்டிருந்த ஒரு நபருக்காக (சீமாட்டி) ஜெபித்தார். அதன் பிறகு அந்த சீமாட்டியோ மரித்துப்போனார். இந்த சிறு பிரசங்கியோ, “சரி... அது அவசியமில்லை, தேவன்... இல்லை. தேவனே இல்லை, இருந்திருந்தால் தன்னுடைய வார்த்தையை காத்து கொண்டிருப்பார்”. வேதத்தில் கூறியிருக்கும் வண்ணமாகவே நான் அவளை அபிஷேக்கித்தேன், அவர் தம்முடைய வார்த்தையைக் காத்துக் கொள்ளாவிடில் அவர் தேவனாக இருக்கமுடியாது, “அது வெறுமனே ஒரு புத்தகம் தான்” என்று கூறினான். இப்பொழுது, நீங்கள் தேவனை அறியாத பட்சத்தில் அது அவ்விதமாகத் தான் காணப்படும். அது வேதாகமத்தின் ஒரு பாகமாக இருக்கிறதே அன்றி, அதுவே முழு வேதாகமம் ஆகாது. அது ஒரு தனிப்பட்ட மனிதனின் விசுவாசத்தை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கிறது, பாருங்கள். 13நான் என்னுடைய மனைவியினிடத்தில் இவ்விதமாகக் கூறினேன், “அனேக காரியங்கள் இவ்விதமாய் நிகழ்கிறதை அறிந்தவனாய் இருக்கிறேன். முடிவில் எனக்கு எவ்விதமாக சம்பவிக்கும் என்பதை நான் அறியாதவனாய் இருக்கிறேன். நானும் அதேவிதமாக போக நேரிடலாம். தேவன் தாமே தன்னுடைய இரக்கத்தின் கரத்தை என்னிடத்திலிருந்து விலக்குவாரானல், நானும் அதேவிதமாக கடந்துசெல்வேன். ஆனால், தேவன்தாமே அவருடைய இரக்கம், வழிநடத்தலின் கரத்தை என் மேலாக வைக்கும் வரைகும் நான் தொடர்ந்து போய்க் கொண்டிருப்பேன்”. நான் மீடாவினிடத்தில் “என்னுடைய சிறிய பெண் ஷேரனை தரிசனத்தில் பார்த்த பிறகு அந்தகாலையில் அந்த அறையில் இருந்தது யார்? என்று கேட்டேன்”. 14சொல்லபோனால், அன்றொருநாளில், நான் மயங்கி விழுகின்றதான நிலையை அடைந்து வீதியிலே அமர்ந்தேன். அதன் பிறகு நான் அவளைப் பற்றிக் கண்டதான தரிசனத்தைக் குறித்து நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். அந்த தரிசனத்தில் நான் கண்ட விதமாகவே, ஜெபர்சன்வில் வீதியில் ஒரு வாலிபபெண் எனக்கு பக்கத்தில் நடந்து வருகிறதை நான் பார்த்தேன். நான் என்னுடைய கரங்களைச் சேர்த்து பிடித்துக் கொள்ளவேண்டியதாக இருந்தது. பார்பதற்க்கு என்னுடைய சிறு ஷேரனை தரிசனத்தில் கண்ட விதமாகவே அது இருந்தது; அப்பொழுது அவள் ஒரு வாலிபபெண்ணாக இருந்தாள். அந்தக் காலைபொழுதிலே, தரிசனத்துக்கு பிறகு, மகிமையில், ஹோப் என்னிடத்தில் அவளுடைய கரத்தை என்னுடைய தோள்களைச் சுற்றிலும் போட்டுக் கொண்டவளாய், “எங்களைக் குறித்து கவலைப்பட வேண்டாம், பில். நாங்கள் இங்கு நலமான இடத்தில் இருக்கிறோம்” என்றாள். நான் அப்பொழுது தற்கொலை செய்துக் கொள்ள வேண்டுமென்ற எண்ணத்தில் இருந்தேன். அவள், “கவலைப் படாதீர்கள், நீங்கள் இனி கவலைப்பட மாட்டீர்கள் என்று எனக்கு வாக்குக் கொடுங்கள்” என்றாள். அதற்கு நான், “என்னால் வாக்கு கொடுக்க முடியாது ஹோப், ஏனெனில் நான் கவலையாய் இருக்கிறேன், என்னால் கவலை கொள்ளாமல் இருக்க முடியாது” என்றேன். 15நான் அந்தத் தரிசனத்திலிருந்து வெளியே வந்தவுடன், இருட்டான ஒரு அறையில் நான் நின்றுக் கொண்டிருந்தேன். அது ஒரு தரிசனமும் இல்லை, என்னுடையக் கற்பனையும் இல்லை, ஆனால் இன்னுமாக அவளுடையக் கரம் என்மேலாக இருந்தது. அவள் என்னைத் தட்டிக் கொடுத்தவளாய் சமாதானப் படுத்திக் கொண்டிருந்தாள். “ஒரு நிமிடம் பொறுங்கள், அந்த நாட்களில் இந்த தரிசனத்தை எவ்விதம் அழைக்க வேண்டும் என்பதை நான் அறியாதிருந்தேன்”. நான் அதை ஒரு மெய்மறந்த நிலை என்று அழைத்தேன். அவளுடைய கரமானது இன்னுமாக என்மேல் இருந்தது“. நான், ”நீ இங்கு இருக்கிறாயா ஹோப்?“ என்று கேட்டேன். அதற்க்கு அவள், “பில், நீங்கள் என்னைக் குறித்தும், ஷேரனைக் குறித்தும் இனி கவலைப் படுவதில்லை என்று வாக்குத் கொடுங்கள்” என்றாள். ஏனெனில், நான் என் வாழ்வின் முடிவுக்கு வந்திருந்தேனே, தற்கொலை செய்துக் கொள்வதற்குத் தயாராக இருந்தேன். பின்பு, “நான் உனக்கு வாக்களிக்கிறேன்” என்று அவளிடத்தில் கூறினேன். அவள் என்னைக் கட்டித் தழுவி, அவளுடைய கரத்தால் என்னை தட்டிக்கொடுத்தாள். அதன்பிறகு, “ஹோப் நீ எங்கே இருக்கிறாய்?” என்று கேட்டேன். நான் எழுந்து அந்த விளக்கின் சிறிய சங்கிலியை பிடித்து இழுக்கும் வரைக்கும் அதை உணர்ந்தேன். அவள் எங்கேயாவது உட்கார்ந்து கொண்டிருக்கிறாளா என்று ஒவ்வொரு நாற்காலியையும் தேடி சென்றேன். அவர் தேவனாகவே இருக்கிறார்.அவர் மோசேயும், எலியாவும் காணப்பட்ட அந்த மறுரூபமலையில் எவ்விதமாக இருந்தாரோ அதேவிதமாக இன்றைக்கும் இருக்கிறார். அவர் இன்னுமாக தேவனாகவே இருக்கிறார். 16நாம் ஒருவேளைஅநேக தொல்லைகளுக்குள்ளும் சோதனைகளுக்குள்ளும் கடந்து போகக்கூடும். வெறுமனே நினைவில் கொள்ளுங்கள், இதை அறிந்த ஒருவர் பாதைக்கு ஒளியைக் கொடுத்து, அதை நிஜமாக்குகிறவர் இருக்கிறார் என்று. திரைக்கு பின்னால் என்ன இருக்கிறது என்பதை நான் அறியேன்.ஆனால் ஒரு காரியத்தை நான் அறிந்திருக்கிறேன். ஒவ்வொரு நாளும் உன்னத அழைப்பின் இலக்கை தொடந்து சென்று, என்றோ ஒரு நாள் நடக்கப்போகிற அந்த மகத்தான நிகழ்வுக்காக வாழ முயற்சி செய்துக்கொண்டிருக்கிறேன்; அவரை நான் முகமுகமாய்காணும் போது “கிருபையினால் இரட்சிக்கப்பட்டேன்” என்ற கதையை அவரிடத்தில் கூறுவேன். அந்த நாளுக்காகத்தான் நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். நிகழந்த காரியங்களை பின்னாக விட்டு, தொடர்ந்து முன்னேறி போய்க் கொண்டிருக்கவே விரும்புகிறேன். 17இப்பொழுது, இந்த கூடாரத்தில் இருக்கின்ற நீங்கள் தாமே, உன்னத அழைப்பை நோக்கியே தொடர்ந்து போகவேண்டும் என்று நான் வாஞ்சிக்கிறேன். நீங்கள் எதை செய்தாலும் ஒற்றுமையாயிருங்கள், உங்களால் முடிந்த மட்டிலும் அந்நியர்களோடு கலவாமல் ஒற்றுமையாயிருங்கள், ஆனாலும் மற்றவர்களையும் அணுகி உள்ளே கொண்டு வரும்படிக்கு உங்கள் கரமானது எப்பொழுதும் வெளியே நீட்டினதாயிருக்கட்டும். இப்பொழுது நாம் பிரசங்கிக்கிறதும், சிரத்தையோடு போராடுகிறதுமான இந்த விசுவாசத்திலிருந்து ஒரு அங்குலம் கூட நகர வேண்டாம். நீங்கள் என்னை அவருடைய ஊழியக்காரன் என்று விசுவாசிப்பீர்களேயாகில், இதுவே தேவனுடைய திட்டமாய் இருக்கிறது. அது ஒருபோதும் பெரும்பான்மையில் இருக்காது. அது எப்போதுமே சிறுபான்மையில்தான் இருக்கும், அது எப்பொழுதும் அவ்விதமாகவே தான் இருந்தது, இனிமேலும் அது அவ்விதமாகவே இருக்கும். ஆனால், “பயப்படாதே சிறு மந்தையே, உங்களுக்கு இராஜ்ஜியத்தைக் கொடுக்க உங்கள் பிதா பிரியமாயிருக்கிறார்”, என்று எழுதப்பட்டிருக்கிறதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். 18இப்பொழுது, நம்முடைய சபையானது ஒரு ஒழுங்கில் கொண்டு வரப்பட்டிருக்கின்றபடியால், நம்மிடத்தில் உதவிக்காரர்களும் (டீக்கன்மார்), தர்மகர்த்தாக்களும், ஞாயிறு பள்ளி நிர்வாகிகளும், மேய்ப்பர் போன்ற சபையின் அலுவலர்களின் குழுவைக் கொண்டிருக்கின்றோம். மக்களாகிய நீங்கள் தாமே இந்த அலுவலர்களையும், மேய்ப்பரையும் தேந்ததெடுத்திருக்கிறீர்கள். நான் வெறுமனே பொதுவான மேற்பார்வையிடுகிறவனாயிருந்து, அவை சரியாக நடக்கின்றதா என்றும், ஆலோசனை வழங்கவும் மற்றும் அது போன்ற காரியங்களை கவனிக்கிறேன். மக்களாகிய நீங்கள் தாமே உங்களுடைய மேய்ப்பரைத் தேர்ந்தெடுக்கிறவர்களாகவும், நீங்கள் தாமே உங்கள் தர்மகர்த்தாக்களைத் தேர்ந்தெடுக்கிறவர்களாகவும், நீங்கள் தாமே உங்களுடைய டீக்கன்மார்களை தேர்ந்தெடுக்கிறவர்களாகவும், இந்த சபையில் இருக்கின்றதான ஒவ்வொரு அலுவலர்களையும், மக்களாகிய நீங்கள் தாமே தேர்ந்தெடுத்தவர்களாய் இருக்கிறீர்கள். நீங்கள் அவர்களுக்கு உறுதுணையாக நிற்பது அது உங்களுடைய கடமையாயிருக்கிறது, பாருங்கள‚ அவர்களும் தவறு செய்யக்கூடும். அவர்கள் சாவுக்கேதுவானவர்கள், வெறுமனே மனிதர்கள், அவர்கள் தவறுகள் இழைக்கக் கூடும். ஆனால்,அமெரிக்கா ஐக்கிய தேசத்தின் குடியரசுத் தலைவரானவர், ஒரு தவறு செய்வாரெனில் ஜனாதிபதி பொறுப்பிலிருந்து நாம் அவரைத் தூக்கிஎறிந்து விடுகிறோமா? நாம் அதை மறந்துவிட்டவர்களாய் தொடர்ந்து போய்க் கொண்டே இருக்கிறோம். இப்பொழுது, அந்த விதமாகவே தாம்நாம் நம்முடைய சபையிலும் செய்யவேண்டியவர்களாய் இருக்கிறோம். ஒரு சில நிமிடங்களுக்கு முன்பாக, அவர் எவ்விதத்தில் டீக்கன்மார்களுக்கு ஜெப்பித்தார் என்பதை கேட்டுக்கொண்டிருந்தேன். அங்கே, வாசலண்டையில் நீங்கள் எல்லோரும் எப்படியாய் ஒருமனதோடு இருக்கிறீர்கள் என்று சாட்சியை தர்மக்கத்தாக்கள் சொல்ல நான் கேட்டுகொண்டிருந்தேன். இப்பொழுது அந்த விதமாகவே தரித்து இருங்கள். அங்கத்தினர்களாகிய நீங்கள் இந்த தர்மகர்த்தாக்களுக்கும், டீக்கன்மார்களுக்கும், மேய்ப்பருக்கும் உறுதுணையாய் இருங்கள். நீங்கள் இவ்விதமாக ஒன்று கூடினவர்களாய் இருக்கும் போது, அது உடைக்கப்பட வேண்டும் என்பதே சாத்தானுடைய வேலையாய் இருக்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். அது எப்பொழுமே அவ்விதமாகத் தான் இருந்தது, இனிமேலும் அவ்விதமாகவேதான் இருக்கும். ஆனால், நீங்கள் உங்கள் அலுவலர்களுக்காக நில்லுங்கள். அதைக் குறித்து தான் நான் பேச வேண்டுமென இருக்கிறேன். 19மேலும், இந்த காலையில் அறிவிப்பு பலகையில் வைப்பதற்கான சபை அலுவலக குழுக்களின் கூட்டம், அவர்களின் அதிகாரம் குறித்ததான காரியம் என்னிடத்தில் இருக்கிறது. அது அறிவிப்புப் பலகையில் வைக்கப்பட்டு இருக்கும். அதனுடைய ஒரு நகலை, தர்மகர்த்தாக்களின் தலைவரான சகோதரன் ராபர்ஸன் அவர்களுக்கு கொடுக்கும்படிக்கு வைத்திருக்கிறேன். மேலும், சகோதரன் காலின்ஸ் அவர்களுக்கு ஒரு நகலை வைத்திருக்கிறேன், அவர் தாமே உதவிக்காரர் (டீக்கன்மார்) குழுவின் தலைவராக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் என்று நான் நினைக்கிறேன். இப்பொழுது, இந்த அலுவலகங்கள் அனைத்துமே, வேதத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்டிருப்பதால், அவர்கள் என்ன செய்யவேண்டும் என்பதற்கான, வேதத்தின் அடிப்படையிலான விதிமுறைகள் அவர்களுக்கு இருக்கவேண்டும். தர்மகர்த்தாக்கள் அவர்களுக்கென தனி அலுவலகத்தை கொண்டவர்களாய் இருக்கிறார்கள். உதவிக்காரர்கள் அவர்களுக்கென தனி அலுவலகத்தைக் கொண்டவர்களாய் இருக்கிறார்கள். ஞாயிறு பள்ளி நிர்வாக அதிகாரி அவருக்கென தனி அலுவலகத்தைக் கொண்டிருக்கிறார். மேய்ப்பரானவர் இந்த மந்தை அனைத்திற்கும் தலைவராய் இருக்கிறார். 20இப்பொழுது, இந்த அலுவலகங்கள் ஒவ்வொன்றும் பொதுவான காரியங்களைக் கொண்டிருப்பார்கள். ஆனால், உங்கள் சந்திப்பு கூட்டங்கள் ஒன்றாக நடைபெறக் கூடாது என்று நான் நினைக்கிறேன். அது அவரவர் அலுவல் சந்திப்பு கூட்டமாக இருக்கவேண்டும், ஏனென்றால் (டீக்கன்மார்கள்) உதவிக்காரர்கள் தர்மகர்த்தாக்களிடம் கூறுவதற்க்கு எந்த அலுவலும் இல்லாதபட்சத்தில், அவர்களிடத்தில் சொல்வதற்க் கென்று ஒன்றுமில்லை. மேலும் தர்மகர்த்தாக்களிடத்திலும் அதேவிதமாக உள்ளது. அவர்கள் நிதி மற்றும் கட்டிடத்தின் பொருள்கள் மீது பொறுப்பு உடையவர்கள்,(டீக்கன்மார்) உதவிக்காரர்கள் அலுவலில் அவர்களுக்கு ஒன்றும் கிடையாது. (டீக்கன்மார்) உதவிக்காரர்கள் சபையின் விதிமுறைகளை காவல் காக்கிறவர்களும் (போலீஸ்) மற்றும் மேய்ப்பருக்கு உதவிக்காரர்களாகவும் இருக்கிறார்கள். தர்மகர்த்தாக்கள் தாமே சொத்துக்கள் முழுவதையும் தங்கள் பொறுப்பில் வைத்திருப்பார்கள். தர்மகர்த்தாக்கள் சபையின் ஆவிக்குரிய காரியங்களில் செய்வதற்க்கு ஒன்றுமில்லை மற்றும் (டீக்கன்மார்) உதவிக்காரர்கள் சபையின் நிதி காரியங்களில் செய்வதற்கு ஒன்றுமில்லை. ஆகவே, அது அவ்விதமாகத்தான் இருக்கவேண்டும். மற்றும், ஞாயிறு பள்ளி மேற்பார்வையாளர் தாமே ஞாயிறு பள்ளியின் தலைவராக இருக்கிறார். ஆகவே, நான் அவை அனைத்தையும் எழுதி, தட்டச்சு செய்யப்பட்டு, அறிவுப்புப் பலகையில் போடுவதற்கு ஏதுவாய் வைத்திருக்கிறேன். 21இப்பொழுது சபையானது எந்த உபதேசத்தை கடைபிடிக்கிறதோ அதை நாம் சட்டம்போட்டு (frame) இங்கே சபையில் அதைநாம் மாட்டப் போகிறோம்; நாம் கடைப்பிடிக்கிற சபையின் உபதேசம், கொள்கைகள். இப்பொழுது நாம் சபையாக இருப்பதற்க்கு நமக்கென்று ஒரு உபதேசம் இருக்கவேண்டும். நாம் எந்த ஒரு வரை முறையையும் வைத்துக் கொண்டு நாங்கள், “இவ்வளவு தூரம் மட்டுமே செல்வோம்” என்று சொல்லவில்லை. தேவன் தம்முடைய வேதத்தில் எந்த அளவிற்கு மக்களுடன் ஐக்கியமாய் இருக்க அனுமதிக்கிறாரோ அந்த அளவிற்கு நாம் அனைவரிடத்திலும் ஐக்கியம் கொள்கிறவர்களாய் இருப்போம். இப்பொழுது, ஒருமித்து இருங்கள், ஏக சிந்தையுடன், ஏகமனதுடன் தேவனுக்காக தொடர்ந்து முன்னோக்கி செல்லுங்கள். அவ்விதமாகத் தான் நாம் செய்யவேண்டும் என்று தேவன் விரும்புகிறார். இப்பொழுது நாம் ஜெபித்து அதன்பின் வார்த்தையை திறப்போம். 22ஓ விலையேறப் பெற்ற கர்த்தாவே, இப்பொழுது நாங்கள் உம்முடைய தெய்வீக வார்த்தையை அல்லது வாசிக்கப் போகிறதான வார்த்தையை அணுகப் போகிறோம். எங்களுக்குத் தேவைப்படுகிறதை உம்முடைய பரிசுத்த ஆவியானவர் தாமே எங்களுக்கு வியாக்கியானம் செய்து தருவாராக. நீர் உம்முடைய கிருபையினால் அழைத்த அழைப்பை பெற்ற பிள்ளைகள் நாங்கள் என்பதை அறிந்துக் கொண்டவர்களாய், அதன்படி பேசவும், நடக்கவும், ஜீவிக்கவும் செய்யட்டும் கர்த்தாவே. நாங்கள் ஏதோ மகத்தான அசைவாய் எழும்ப ஆயத்தமாய் இருப்பதை காண்பதினால் இந்த சபையில் ஐக்கியம் உண்டாயிருக்கட்டும். நீர் என்னை உலகின் வெவ்வேறு இடங்களுக்கு அனுப்பி அங்கே விசுவாசத்தை நிலைநாட்ட, ஆயத்தமும், சித்தமுடைய பயிற்றுவிக்கப்பட்ட ஒரு ஊழியக்காரனை பொறுப்பை எடுத்துக்கொள்ளும்படிக்கு செய்வீரானால்; அதேவிதமாக மற்ற ஊழியக்காரர்கள் ஆயத்தப்படுத்தப்பட்டு வெவ்வேறு இடங்களுக்கு அனுபப்பட வேண்டும் என்று நாங்கள் உணர்கிறோம். நாங்கள் தைரியமாய் நிற்கிறதான, பரிசுத்தவான்களுக்கு ஒருவிசை ஒப்புக்கொடுக்கப்பட்ட விசுவாசமானது, இந்த உலகத்தைச் சுற்றிலும் ஒரு வட்டமாக ஆகட்டும். இதை அருளும் கர்த்தாவே. ஒருநாளில் நாங்கள் இந்த இடத்தை உமக்கு அர்ப்பணித்த போது பதர்க்குவியலாக இருந்த இந்த இடத்திலிருந்து ஒரு சபை எழும்பட்டும் கர்த்தாவே, மேலும் இந்த சபையிலிருந்து ஊழியக்காரர்களும், சுவிசேஷகர்களும், போதகர்களும், மிஷனரிமார்களும் உலகின் எல்லா பாகங்களுக்கும் புறப்பட்டு செல்லட்டும். 23இந்தக் காலைவேளையில், இப்பொழுது துன்பப்பட்டுக் கொண்டிருக்கின்றதான எங்களுடைய சகோதரன் ஸ்ட்ரைக்கர் மற்றும் சகோதரி ஸ்ட்ரைக்கர் அவர்களை விசேஷித்த விதத்தில் ஆசீர்வதிக்கும் படியாகக் வேண்டிக் கொள்கிறோம். ஆனால் நாங்கள் அனைவருமே இந்தப் பரீட்சைகளுக்குள்ளாக போக வேண்டியவர்களாய் இருக்கிறோம் என்பதை நாங்கள் அறிந்திருக்கிறோம். தேவனிடத்தில் வருகிறதான ஒவ்வொரு மகனும் சிட்சிக்கப்படவும், சோதிக்கப்படவும் வேண்டும். நாங்கள் ஒருவேளை சுலபமாய் அதை விட்டு பின்னுக்காக திரும்பிச் செல்வோமாகில், நாங்கள் தேவனுடைய பிள்ளைகளாய் இராமல் முறை தவறிப் பிறந்த பிள்ளைகளாயிருப்போம். சகோதரன் மற்றும் சகோதரி ஸ்ட்ரைக்கர் தங்கள் கடமையின் பொறுப்பில் தரித்திருக்கும்படி அவர்களுக்கு பெலத்தையும் வல்லமையும் அருளுவீராக. அவர்கள் தங்கள் ஆகாரத்திற்கு இரந்துண்ண நேரிடுமானால், உம்முடைய ஆசீர்வாதத்தின் கரம்தாமே அவர்கள் மேல் இருப்பதாக. ஏனென்றால் எங்களுக்கு தெரியாது, ஆனால் அந்த கடினமான பிரயாசத்தின் மூலமாக அந்த ஆப்பிரிக்க பழங்குடியினருக்கு ஒரு உண்மையான கிறிஸ்தவன் என்னவாயிருப்பான் என்பதை காண்பிக்க கூடும். இதையருளும், கர்த்தாவே. இப்பொழுது யாவும் உம்முடைய சித்தத்தின்படி நடப்பதாக. 24மேய்ப்பராகிய சகோதரன் நெவில் அவர்களை ஆசீர்வதியும். இன்னுமாக,கடந்த காலத்தில் அவரை இந்த மந்தையின் மேய்ப்பனாக வைத்தது போலவே, இப்பொழுதும் அவரை அப்படியே ஆக்கும் என்று நாங்கள் ஜெபிக்கிறோம் கர்த்தாவே.மேலும், மிகவும் வியாதிப்பட்டிருக்கிற அவருடைய அருமையான சிறு மனைவியை நாங்கள் மறந்து விடவில்லை. சத்துருவானவன் சகோதரன் நெவில் அவர்களை பிள்ளைகளுடன், தாயை இழந்தவர்களாய், தன்னந்தனியாய் விட்டுவிடப் பார்க்கிறான். ஆனால், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தை, நாங்கள் விசுவாசத்துடன் அந்த சத்துருவுக்கும் எங்களுடைய சகோதரிக்கும் இடையில் வைத்தவர்களாய் நிற்கிறோம். எல்லா ஸ்தீரிகளும் இந்த காலத்தின் இருளின் பள்ளத்தாக்கின் ஊடாக கடந்து செல்ல நியமிக்கபட்டிருக்கிறதை அறிந்திருக்கிறபடியால், கர்த்தாவே, உம்முடைய ஆவியானவர்தாமே, அவளுக்கு மகத்தானவராக இருந்தருளும், ஆனால் நீர் அவ(ள்)ரோடு இருக்கத்தக்கதாக நாங்கள் ஜெபிக்கிறோம். அந்த சிறுபிள்ளைகளை நீர் ஆசீர்வதியும். இப்பொழுது அவள் பதட்டத்துடனும்;, வேதனையோடும் இருக்ககூடும். ஆனால், பரிசுத்த ஆவியானவர் தாமே எல்லா நேரங்களிலும் அந்த குடும்பத்திற்க்காக இரக்கத்தின் வாயிலில் இருப்பாராக. 25கர்த்தாவே, எங்கள் தர்மகர்த்தாக்கள் குழுவாகிய எங்கள் சகோதரன் உட், எங்கள் சகோதரன் ஈகன், சகோதரன் ராபர்ஸன், மற்றும் யாவரையும் ஆசீர்வதியும் கர்த்தாவே. டீக்கன்மார்கள், தர்மகர்த்தாக்கள், சபையில் உடன் அலுவலில் உள்ள யாவரும் தங்களுக்கு அளிக்கப்பட்ட அலுவல் காலம்வரை பரிசுத்தத்தோடும் நீதியோடும் ஊழியம் செய்திட நீர் தாமே அனுமதித்திடும்படிக்கு ஜெபிக்கிறோம், கர்த்தாவே, கடந்த காலங்களில் சேவை செய்த அலுவலர்ளையும் ஆசீர்வதியும் கர்த்தாவே. நாங்கள் தாமே சபை ஒருமைப்பாட்டையும், கர்த்தருடைய ஆவியையும், அன்பையும் பெற்றவர்கள் என்று அறியப்படும் படிக்காய் நீர் தொடர்ந்து எங்கள் அனைவருடனும் கூட இருக்கும்படி நாங்கள் ஜெபிக்கிறோம், கர்த்தாவே. எழுதப்பட்ட உம்முடைய வார்த்தையை வாசிக்கிறதான இந்த வேளையில், எங்களுடைய தேவைகளுக்கேற்ப உம்முடைய வார்த்தையை நீர் எங்களுக்கு பகிர்ந்து அளிக்கும் படிக்காய் வேண்டுகிறோம். இதை நாங்கள் இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம், ஆமென். 26மற்றும் ஜெபிக்கும் போது, நம்முடைய புதிய தர்மகர்தத்தாக்கள் குழுவுக்காகவும் மற்ற காரியங்களுக்காக ஆசீர்வாதத்தை கேட்கும்போது அல்லது அவர்களை ஆசீர்வதிக்கும்போது, இதற்கு முன்னதாக நன்றாக சேவைசெய்த நம்முடைய சகோதரன் ஃப்ளிமேன், சகோதரன் டீட்ஸ்மேன் மற்றும் இங்கே உட்கார்ந்து கொண்டிருக்கிறவர்களை நினைத்துக் கொண்டிருந்தேன். அவர்களுடைய உத்தமமான பணிக்காக நாம் தேவனுக்கு நன்றியுள்ளவர்களாய் இருக்கவேண்டும். அவர்களை ஆசீர்வதிக்கும்படிக்கு, உதவி செய்யும்படிக்கு தேவன் தாமே அவர்களோடு எப்பொழுதும் இருப்பராக. நான் இப்பொழுது வாசிப்பதற்கு முன்னதாக அறிவிப்புப் பலகையில் உள்ளதையும் மற்றும் வரப்போகிற கூட்டங்களையும் சற்று நினைவில் கொள்ளுங்கள். 27இந்த காலையில் நம்முடன் இருக்கிற விலையேறப் பெற்றவர்களுக்காக நாம் மகிழ்ச்சியாக இருக்கிறோம். நல்லது, நான் இப்படியாக சொல்லட்டும் கடந்த நாட்களிலும், இப்பொழுதும் எனக்கு விலையேறப் பெற்றவரும், நல்ல சகோதரனுமாகிய ஃப்ரட் சாத்மேன் அவருடைய மனைவியும் கனடாவில் உள்ள சாஸ்காட்ச்வனிலிருந்து இங்கே நம்முடன் தற்காலிகமாய் வசிக்கும்படிக்கு வந்து இருக்கிறார்கள். நம்முடைய தேசத்தில் தற்காலிகமாக வசிக்கிறவர், ஆனால் நம்முடைய ஐக்கியத்தில் நேசிக்கப்படத்தக்கவர் சகோதரன் ஃப்ரட் சாத்மேன். அவர் அங்கே உட்கார்ந்து கொண்டிருக்கிறார். நான் கனடா தேசத்தில் இருந்தபோது எனக்கு கூட்டங்களை மேற்பார்வை செய்தார். மற்றும் இன்னொரு விலையேறப்பெற்ற சகோதரன், முன்னதாக கனடா தேசத்தை சேர்ந்தவர், சொந்தமாக வியாபாரம் செய்பவர். உங்களால் தேவனைக் காட்டிலும்அதிகமாக கொடுக்க முடியாது என்று உலகத்துக்கு நிரூபிக்ககூடியவர். அவரும் அவர் நண்பரும் சேர்ந்து கட்டிடத்தை கட்டுவதற்க்கான நிதி நிறுவனம் அல்லது அயல் நாட்டு மிஷனரி ஊழியத்திற்க்கான ஒரு நிறுவனத்தை உருவாக்கினார்கள். அவர்கள் என்னை ஓக்லேண்டுக்கு ஒரு கூட்டத்தை நடத்தும்படிக்கு அழைத்தார்கள், அதற்கான பணமும் அவர்களிடத்தில் இருப்பதாகவும், அவர்களுடைய நிறுவனத்தின் மூலம் எல்லா செலவுகளையும் ஏற்றுக் கொள்வதாகவும் கூறினார்கள். 28நானும் சகோ. ஃப்ரெட்டும் கொஞ்சம் பணத்தை பெறும்படிக்கு, சகோ. ஃப்ரெட்டின் நிறுவனத்திலிருந்து முயற்ச்சித்தோம், நான் அதை தனி ஒருவனாய் ஏற்றுக்கொள்ள விருப்பமில்லை. எனவே நாங்கள் கனடா மக்களுக்கு அதை கொடுத்துவிடவும் எந்த ஒரு காணிக்கையும் எடுக்ககூடாது என்றும் தீர்மானித்திருந்தோம். ஆனால் அது அந்த அளவுக்கு நன்றாக இருக்கவில்லை, கூட்டங்கள் எல்லாம் அருமையாக இருந்தது. ஆனால் நாங்கள் காணிக்கை எடுக்காத காரணத்தினால்... சபையானது நூறுகோடி டாலர் மதிப்புடையதாக இருந்தாலும் நீங்கள் காணிக்கை எடுக்கும்படிக்கு தேவனுக்கு இன்னுமாக கடமைப்பட்டிருக்கிறீர்கள். அது ஆராதனையின் ஒருபாகமாக உள்ளது. நீங்கள் அதினாலே வஞ்சிக்கிறீர்கள்... நான் பணம் மற்றும் அதுபோன்ற காரியங்களில் எவ்வளவாக எதிராக இருக்கிறேனோ, அதே விதமாக ஒரு மனிதன் தவறாக இருக்கும்போது அவன் தவறாக இருப்பதை ஒத்துக்கொள்ளவது நல்லது என்பதை நான் அறிந்துக்கொண்டேன். ஏனென்றால் நானும் சகோ ஃப்ரெட்டும் அது அந்த அளவுக்கு நன்மையானதையோ அல்லது விசேஷமானதையோ உருவாக்குவதில்லை என்று பார்த்திருக்கிறோம். 29சகோ. பார்டர்ஸ், நான் சகோ. ஃப்ரெட் அவர்களை விட்டு, ஓக்லாண்டிற்க்கு உங்களிடத்தில் வந்தபோது, “நீங்கள் அப்படி செய்யவேண்டாம். நீங்கள் வெறுமனே காணிக்கைத் தட்டை அனுப்பி, காணிக்கை எடுத்து, அது எதுவாக இருந்தாலும், அதை மறுபடியுமாய் வேறு எங்காவது நடக்க இருக்கிறதான கூட்டங்களுக்கு பயன்படுத்தும் விதத்தில், அந்த பணத்தை உங்கள் நிறுவனத்திலேயே திரும்பவுமாய் போட்டு விடுங்கள்” என்றுக் கூறினேன். மேலும், ஆராதனையானது முடிவு பெறும் முன்னதாகவே, சகோ. பார்டர்ஸ் அவருடைய நண்பர்களோடு என்னிடத்தில் வந்து “நாங்கள் ஆராதனைக்காக எவ்வளவு செலவு செய்தோமோ அது ஏற்கனவே எடுக்கப்பட்டு விட்டது” என்று கூறினார். அதன்பிறகு, ஒரு சில நாட்களுக்கு முன்பு அவர் கலிபோர்னியாவில் உள்ள சான்ஜோஸில் கூட்டத்துக்கு ஏற்பாடுகளை செய்தார். அங்கே அவருக்கு அறுபது அல்லது எழுபது சபைகள் பள்ளத்தாக்கில் இருக்கிறது என்று யூகிக்கிறேன், வெவ்வேறு விசுவாசத்தை உடைய அவர்கள் எல்லாரும் ஒத்துழைப்பு கொடுத்தார்கள். அங்கே எங்களுக்கு அருமையான கூட்டங்கள் இருந்தது. மறுபடியும் நவம்பர் மாதத்தில் அங்கே திரும்பி செல்கிறோம். இங்கே பின்னால் உட்கார்ந்திருக்கிற சகோ. பார்டர்ஸ், சகோ. ஃப்ரெட் எங்களோடு இருப்பதற்க்காக நாங்கள் மகிழ்ச்சியாயுள்ளோம். இவர்கள் உங்களுக்கு அந்நியர்களாய் இருக்கலாம், ஆனால் வெளியே களத்திலே இவர்கள் எனக்கு விலையேறப் பெற்ற சகோதரர்களாயிருக்கிறார்கள், நாம் நிற்கிற விசுவாசத்திற்க்காக இவர்களும் தொடந்து ஊக்கமாய் போராடுகிறார்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, சகோதரனே. இந்த சிறிய பழைய கூடாரத்தில் இந்த காலையில் எங்களோடு நீங்கள் இருப்பதற்க்காக நாங்கள் மகிழ்ச்சியடைக்கிறோம். இங்கே பார்ப்பதற்க்கு அதிகப்படியாய் ஏதுமில்லை. ஆனால் இங்கே ஏதோ ஒன்று இருக்கிறது, அது தேவன் இங்கே வாசம் செய்கிறார் என்பதே, பாருங்கள். அதற்க்காக நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இங்கே, கூறுவதற்கு நேரமிருக்குமானால், வேறு சில சகோதரர்களும் நம்மோடு இன்றைக்கு இருக்கிறார்கள். 30இப்பொழுது நான் எதிர்ப்பார்ப்புடன் ஜெபித்துக் கொண்டிருப்பது என்னவென்றால், அடுத்து சில நாட்களில் கர்த்தருக்கு சித்தமானால் வழிநடத்தப்படுதலை உணந்தவனாய் போக விரும்புகிறேன். (நான் அதைப்பற்றி இன்னுமாக அறிவிப்பு செய்யவில்லை). அடுத்த கூட்டமானது, வெகு விரைவில், ஒஹையோவில் உள்ள முகாமிடும் மைதானத்தில் சகோ. சுல்லிவனுடன் இருக்கும். அது அங்கே மேலே நுறுமைல் தூரத்தில் இருக்கிறதென்று அல்லது அவ்விதமாக ஏதோவொன்று என்று நினைக்கிறேன், இல்லையா ஜீன்? கர்த்தர் தாமே நம்மை தொடர்ந்து வழி நடத்துவாராகில் உம்முடைய விடுமுறையை நீர் தாமே திட்டமிடாத பட்சத்தில் அது அருமையான பயணமாயிருக்கும். நாங்கள் சகோ. சுல்லிவான், அவருடைய மகத்தான செயல்பாட்டிற்க்காய் அவரை பாராட்டுகிறோம், மிகவும் அருமையான மனிதன்; அவர் நகர மேயர், முன்னாள் மேயரும் பழமைவாதியான கென்டக்கியன். இது தான் நான் அவரைக் குறித்து சொல்லவேண்டியது எல்லாம். அன்ரொரு நாள் நான் அவரை சந்தித்தபோது... நாங்கள் அங்கே கென்டக்கியின் மலைகளில் வளர்க்கப்பட்டோம். அவர் என்னை நோக்கி, “நீ இன்னுமாக பெருங்காயத்தை கழுத்தை சுற்றிலும் வைத்திருக்கிறாயா பில்லி என்றார்”. இப்பொழுது உங்களுக்கு தெரியும் அவர் எப்படிப்பட்ட கென்டக்கியன் என்று. இங்கே உள்ள என்னுடைய கென்டக்கி சகோதரர்கள் சகோ. ஜெஃப்ரிஸ் மற்றவர்களையும் அற்பமாய் கூறவில்லை. நானும் ஒரு கென்டக்கியன் என்று உங்களுக்கு தெரியும். நான் உங்களுக்கு ஒன்று சொல்லட்டும் நாம் கென்டக்கியர்களும் அல்ல அமெரிக்கர்களும் அல்ல, நாம் அந்நியர்களும் பரதேசிகளுமாயிருக்கிறோம். நாம் வரப்போகிற பட்டணத்தை தேடிக்கொண்டிருக்கிறோம். 31இப்பொழுது வாசிப்பதற்காய், நாம் யாத்திராகமம் புத்தகத்திலிருந்து ஒரு சில நிமிடங்களுக்கு வாசிப்போம். நான் 23-ம் அதிகாரத்தில், 20 முதல் 23 வசனங்கள் முடிய வாசிக்க விரும்புகிறேன். மேலும், இந்தக் காலைபொழுத்தில், இதிலிருந்து, சரியாகச் சொல்லப் போனால்: ஒரு முற்றிலுமான விடுதலை என்ற பொருளை எடுத்துகொள்ள விரும்பிகிறேன். மேலும் நான் அதிகநேரம் பேசப்போவது இல்லை, இப்பொழுது நீங்கள் அந்த புத்தகத்தையும் அதிகாரத்தையும் திரும்பும்படிக்கு காத்துக் கொண்டிருக்கிறேன். வழியில் உன்னைக் காக்கிறதற்கும், நான் ஆயத்தம் பண்ணின ஸ்தானத்துக்கு உன்னைக் கொண்டுபோய்ச் சேர்க்கிறதற்கும், இதோ, நான் ஒரு தூதனை உனக்கு முன்னே அனுப்புகிறேன். அவர் சமுகத்தில் எச்சரிக்கையாயிருந்து, அவர் வாக்குக்குச் செவிகொடு; அவரைக் கோபப்படுத்தாதே; உங்கள் துரோகங்களை அவர் பொறுப்பதில்லை; என் நாமம் அவர்உள்ளத்தில் இருக்கிறது. இந்த தூதன் யார் என்று சபையாருக்கு தெரிந்திருக்கும் என்று நிச்சயமுடையவ னாயிருக்கிறேன்.... என் நாமம் அவரில் இருக்கிறது. நீ அவர் வாக்கை நன்றாய்க் கேட்டு நான் சொல்வதையெல்லாம் செய்வாயாகில், நான் உன் சத்துருக்களுக்குச் சத்துருவாயும், உன் விரோதிகளுக்கு விரோதியாயும் இருப்பேன். என் தூதனானவர் உனக்கு முன்சென்று, எமோரியரும்,... ஏத்தியரும்,... பெரிசியரும்,... கானானியரும்,... ஏவியரும்,... எபூசியரும்,... இருக்கிற இடத்துக்கு உன்னை நடத்திக் கொண்டுபோவார்; அவர்களை நான் அதம் பண்ணுவேன். 32நீங்கள் ஜெபிப்பீர்களாகில், இப்பொழுது நாம் ஒரு சில நிமிடங்களுக்கு பேசப்போகிற அவருடைய வார்த்தையை தேவன் ஆசீர்வதிப்பாராக. “ஒரு முற்றிலுமான விடுதலை” என்ற தலைப்பை குறித்து நான் சிந்தித்துக் கொண்டிருந்தேன். சபையானது சிறுபான்மையில் இருந்து வருகிறது. இயேசுவானவர் வரும் வரைக்கும் அங்கத்தினர் எண்ணிக்கையில் அது அவ்விதமாகவே இருக்கும். ஆனால் அதுவோ தேவனால் கொடுக்கப்பட்ட சிலாக்கியத்தின் கீழாக ஜீவித்துக் கொண்டிருக்கும். இது பிரான்ஹாம் கூடாரமல்ல, ஆனால் ஜீவனுள்ள தேவனுடைய சபை மட்டுமே என்று நாம் அறிந்து கொள்ளும்போது, பிரான்ஹாம் கூடாரம் என்பது அதனுடைய ஒரு பாகமாக இருக்கிறது. இதுபோன்று நாடு முழுவதும் மற்ற கூடாரங்களும் இருக்கின்றது. 33இன்று இரவு சகோ. ஸ்னெல்லிங் அவர்கள் ஞானஸ்தான ஆராதனை வைத்திருக்கிறார். அதை அறிவிக்கும்படிக்கு சகோ. கார்டிஸ் கூறினார் அல்லது முந்தின நாள் அதைப்பற்றி கூறினதை, நான் மறந்துவிட்டேன். அவர் ஞானஸ்தான ஆராதனையை வைத்திருக்கிறார். உங்களில் யாராவது இன்னும் ஞானஸ்தானம் பெற்றிருக்கவில்லை என்றால், ஏன், இன்றைய இரவின் பொழுதில் சகோ. ஸ்னெல்லிங் அதை உங்களுக்காய் செய்வதில் மிகவும் மகிழ்ச்சி உடையவராய் இருப்பார். அது தாமே, யூடிகாவில் உள்ள பரிசுத்தர்களின் கூடாரத்தில் நடக்க இருக்கிறது. மேலும், சகோ. ஜூனியர் ஜாக்ஸன் நியூ ஆல்பனியில் வைத்திருக்கிறார். மற்றும் நாடு முழுவதிலும் இதைப் போன்றதான அனேக சபைகள் இருக்கின்றன. எனினும் பார்ப்பதற்கு நாம் அனைவரும் ஏறக்குறைய தோற்கடிக்கப்பட்ட பக்கத்தில் இருப்பதைப் போன்று வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம். இந்த காலையில் சகோ. நெவில் செய்த அறிவிப்பை அங்கே பின் பக்கத்தில் இருந்துகேட்டு கொண்டிருந்தேன். அது இவ்விதமாக என் நினைவுக்கு வந்தது, அது மக்கள் விடுதலையினின்று விலகிப் போவதாக காணப்படுவது. எப்படியெனில், மக்கள் அதை பார்த்தபோது ஏதோ காரியமாக அது காணப்பட்டது. எனவே, அவர்கள் “ஓ, நல்லது, தேவன் அதை பார்த்துக் கொள்வார்” என்ற ஒரு மனப்பான்மைக்குள் போனார்கள். ஆனால் அது ஒரு மனப்பான்மை ஆகாது. 34இப்பொழுது, மோசே தேவனால் அழைக்கப்பட்ட போது, அவன் ஒரு முற்றிலுமான, முழுமையான தீர்க்கதரிசியாய் இருந்தான். தேவனானவர் ஒரு காரியத்தைச் செய்யும்படிக்கு ஒரு மனிதனை அனுப்பும்போது, அவர் அவனுக்கு தேவையான எல்லாவற்றையும் அவனுக்குள்ளாக முழுமையாக தரிப்பிக்கிறார். தேவன் ஒரு மனிதனை, ஒரு பிரசங்கியாய் இருக்கும் படியாய் அழைப்பாரேயாகில், அவன் பிரசங்கிக்கதக்கதான காரியங்களை அவனுக்குள்ளாக அவர் வைக்கிறார். அவர் அவனை ஒரு போதகனாய் இருக்கும்படிக்கு அழைத்தால், அவன் போதிக்கதக்கதான காரியங்களை அவனுக்குள் வைக்கிறார். அவர் அவனை ஒருதீர்க்கதரிசியாய் இருக்கும்படி அழைப்பாரேயானால், அவன் தரிசனங்களைக் காணும்படிக்கு ஏதோ சில காரியங்களை அவனுக்குள்வைத்து, தீர்க்கதரிசியாக இருக்கும்படி செய்கிறார். தேவன் எப்பொழுதுமே தன்னுடைய மனிதனை முழுவதுமாக தரிப்பித்திருக்கிறார். மோசேயை எகிப்துக்குள்ளாக அனுப்பின போதும் அவர் அவ்விதமாகவே தான் செய்தார்.அவர் அவனை ஒரு குறிப்பிட்ட வழியில் வளரச் செய்து, ஒரு குறிப்பிட்ட வழியில் கல்வி கற்கச் செய்து, அவர் அவனை வனைந்து அவன் என்னவாக இருக்கவேண்டுமோ அவ்விதமாக அவனை உருவாக்கினார். அவர் நூற்றுக் கணக்கான வருடங்களுக்கு முன்பு ஆபிரகாமுக்கு அவனுடைய மக்களை விடுவிப்பேன் என்று வாக்குத்தத்தம் பண்ணின பிறகு தன்னுடைய சிந்தையில் மோசேயை எவ்விதமாக உருவாக்கவேண்டும் என்று எண்ணியிருந்தாரோ அதேவிதமாக அவனை உருவாக்கினார். மோசே ஒரு முழுமையான தீர்க்கதரிசியாக இருந்தான். 35நீங்கள் கிறிஸ்தவர்களாய் இருக்கும் பட்சத்தில், உங்களை தேவன் ஒருஅரைகுறை கிறிஸ்தவர்களாக உருவாக்குவதில்லை; தேவன் ஒரு முழுமையான கிறிஸ்தவனையே உருவாக்குகிறார். தேவன் ஒரு அரைகுறை பிரசங்கியை உருவாக்குவதில்லை, ஆனால் பிரசங்கியானவன் அரைகுறையாக இருக்கலாம். தேவன் தம்முடையப் பிள்ளைகளை கிறிஸ்தவர்களாகவே ஆக்குகிறார், ஆனால் சில நேரங்களில் அவர்கள் அரைகுறை கிறிஸ்தவர்களாக இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் அப்படியாக இருக்கவேண்டும் என்பது அவருடைய குறிக்கோள் அல்ல. அவர்களுடைய சொந்த வழிகள், அவர்கள் ஜீவியத்தை குறித்ததான தேவனுடைய திட்டத்தோடு கலந்துவிடுவதால் அவர்கள் அந்த விதமாக இருக்கிறார்கள். அவர்கள் இருபக்கமும் சமரசமாகி அரைகுறை கிறிஸ்தவனாகவோ, அரைகுறை பிரசங்கிமார்களாகவோ இருக்கவேண்டும் என்று தேவன் விரும்பவில்லை. அவர்கள் முழுமையாக இடைவேளியில் நிற்கவேண்டும் என்று அவர் விரும்புகிறார். இப்பொழுது, மோசே, தேவன் அவனை ஒரு முழுமையான விடுதலைக்காக, ஒரு முழுமையான தீர்க்கதரிசியாய் உருவாக்கினார். மேலும், மோசேயானவன் தேவனுடையக் கரங்களில் முழுவதுமாக சரணடைந்தவனாக இருந்தான். அந்த காரணத்தினிமித்தம் அவன் என்னவாக இருக்கவேண்டுமோ அதுவாக அவனை உருவாக்கிற்று. தேவன் அவனை நம்பும் அளவுக்கு அவன் தேவனுக்குள் அவ்வளவாய் முழுவதுமாக சரணடைந்தான். 36இந்தக் காலையில், கிறிஸ்தவர்களாயிருக்கிற நாம், தேவன் நம்மை வைத்திருக்கிறதான இந்த ஸ்தானத்தில், அவருடைய நம்பிக்கையை நம்மீதாக வைக்கும் அளவுக்கு நாம் நம்முடைய சுய சித்தங்களை ஒப்புக்கொடுத்து, நம்மை முழுவதுமாய் தேவனிடத்தில் ஒப்புக் கொடுத்திருக்கிறோமா என்று நான் வியக்கிறேன். இந்தக் காலை வேளையில், என்னைக் குறித்து, தேவன் தம்முடைய நம்பிக்கையை என் மீதாக வைக்கும் அளவுக்கு நான் என்னை அவருக்கு அவ்வளவாக ஒப்புக் கொடுத்திருக்கிறேனா என்றும், சகோ. நெவில் மீது நம்பிக்கையை வைக்க முடியுமா என்றும், நம்முடைய தர்மகர்த்தாக்களின் குழுவையும், உதவிக்காரர்கள் குழுவையும், நம்முடைய சபை அங்கத்தினர்களின் மீதும் தம்முடைய நம்பிக்கையை வைக்கமுடியுமா என்றும் நான் வியக்கிறேன். ஏனென்றால் நம் அனைவரும் நமக்கென ஒரு ஸ்தானமும் ஒரு கடமையையும் கொண்டவர்களாக இருக்கிறோம். ஒரு ஊழியக்காரன் பிரசங்கியாக இருக்கும்படி அழைக்கப்பட்டிருப்பார் என்றால் அவன் கிறிஸ்துவின் ஆராய்ந்து முடியாத ஐசுவரியத்தை எந்த வித சமரசமின்றி, பிரசங்கிக்கவும் அதற்காக நிற்க்கவும் அவன் கடமைப்பட்டவனாகயிருக்கிறான்.அவன் பிரசங்கியாக அழைக்கப்பட்டிருப்பான் என்றால் ஒரு நபர் நிமித்தம் ஒரு காரியத்தோடும் சமரசம் பண்ணமாட்டான். 37மற்றும் சபையின் ஒரு அங்கத்தினர், அவர் இந்த குறிப்பிட்ட சபையின் அங்கத்தினராக இருக்கும்படிக்கு அழைக்கப்பட்டிருப்பாராகில், அவர் எந்த காரியத்தோடும் ஒப்புரவாகமாட்டார். நாம் சூதாடக் கூடாது என்று சபையானது விசுவாசிக்கும்பட்சத்தில் அந்த அங்கத்தினர் சீட்டுக்கட்டை தொடவும் கூடாது. நாம் குடிபழக்கத்தை விசுவாசிக்காத பட்சத்தில், அவர் குடிபழக்கத்திலிருந்து முற்றிலுமாக தன் தலையை திருப்பிக் கொள்ளவேண்டும். நாம் சூதாட்டத்திலோ, புகைபிடிப்பதிலோ விசுவாசிக்காத பட்சத்தில் அந்த அங்கத்தினர் அந்த மாதிரியான காரியத்தை தொடவே கூடாது. தேவன் நமக்கு முழுமையான விடுதலையை கொடுத்திருக்கிறார். நாம், நம்மை முழுவதுமாக அவரிடத்தில் ஒப்;புக் கொடுப்போமானல் அவர் அதைச் செய்கிறார். நாம் நம்மை முழுவதுமாக அவருடைய கரத்துக்குள் ஒப்புக் கொடுப்போமானால் பின்பு தேவன் நமக்குள் ஜீவிப்பார். நாம் நம்முடைய வழியிலிருந்து நம்மை விலக்கிக் கொள்ளும்போது. மகிமையின் நம்பிக்கையாகிய கிறிஸ்து நமக்குள்ளாக இருந்த தம்மைத்தாமே பிரதிபலிப்பார். அதன் பிறகு நம்முடைய எண்ணங்கள் அவருடைய எண்ணங்களாயிருக்கும். கிறிஸ்துவானவர் புகைப்பிடிப்பதை உங்களால் கற்பனை செய்துபார்க்க முடியுமா? கிறிஸ்துவானவர் குடிகுடிப்பதையோ அல்லது சீட்டு விளையாடுவதை உங்களால் கற்பனை செய்து பார்க்கமுடியுமா? உங்களுடைய ஆவியானது அவருடைய ஆவியின் பாகமாக இருக்கும் பட்சத்தில் அதுதாமே உங்களுடைய அறிக்கையின் படியாக இருக்க அவர் விரும்புகிறார். ஆனால் நீயோ பிசாசு உள்ளே வர அனுமதித்து கட்டுப்பாட்டை எடுத்துக்கொள்ளச் செய்கிறாய், மேலும் நீயோ அந்த விதமான காரியங்களை செய்யும்போது நீ தவறாயிருக்கிறாய் என்று உன்னுடைய இருதயத்தின் ஆழத்தில் எல்லா நேரங்களிலும் அதை அறிந்திருக்கிறாய். மற்றும் ஒரு சபை அங்கத்தினர் மற்ற அங்கத்தினருக்கு விரோதமாக பேசும்போது அது தவறு என்று நீங்கள் அறிந்து இருக்கிறீர்கள். நீங்களோ ஒருவருக்காக ஒருவர் ஜெபிக்கும்படி கட்டளையிடப்பட்டு இருக்கிறீர்கள் ஆனால் ஒருவருக்கு விரோதமாக ஒருவர் பேசும்படிக்கு அல்ல, ஒருவருக்காக ஒருவர் அன்பு கூரும்படிக்கே. மேலும் ஒருவர் வீழ்ந்து இருப்பாரானால் அவரை தூக்கி எடுத்து அவருக்கு உதவிசெய்வோம். இப்பொழுது அது தாமே நம்மை ஒருங்கிணைந்த விசுவாசிகளின் கூட்டமாய் ஆக்குகிறது. இப்பொழுது நாம் அதற்கு கீழ்படியாதபட்சத்தில் நாம் தேவனுக்கு கீழ்படியாதவர்களும் அவருக்கு பிரியம் இல்லாமல் ஜீவிக்கிறவர்களாயுமிருப்போம். அப்படியாக இருக்கும்பட்சத்தில், நம்முடைய சபையும் நம்முடைய மக்களும் செழிப்படைய முடியாது, சபையானது தொடர்ந்து செல்லமுடியாது. ஏனெனில் நாம் எல்லாரும் ஒற்றுமை இல்லாதவர்களாயிருக்கிறோம். இயேசுவானவர் கூறினது போல “புளிப்புள்ள கொஞ்ச மாவானது பிசைந்த மாவனைத்தையும் உப்பப்பண்ணும்” (புளிப்பாக்கும்). 38இப்பொழுது, சபை அலுவலகக் குழுவானது, அல்லது உதவிக்காரர்கள் (டீக்கன்மார்) போன்றவர்கள், நம்மிடத்தில் வந்து நாங்கள் புதிதாக ஒரு சபைக் கூடாரத்தைக் கட்டவேண்டும் என நினைத்துக் கொண்டிருக்கின்றோம் எனக் கூறுவார்களானால். அப்படியாக செய்வது உதவிக்காரர்களின் சம்மதமாயிருக்கும் பட்சத்தில், தர்மகர்த்தாக்களிடம் அது ஆலோசிக்கப்படுகிறது. மேலும் அதை செய்வதற்க்கு அவர்களிடத்தில் பணம் இல்லாதபோது, நாம் இப்பொழுது கொண்டிருக்கிற கட்டிட திட்டத்தைப் போல அவர்கள் செய்யலாம். முழு சபையும் சுயாதீனமாயிருப்பதால்,பொதுவான கூட்டத்தாராகிய நம்மிடத்தில் அது கொண்டுவரப்படுகிறது. அதன்பின்பு சபையானது புதிய கூடாரம் கட்ட ஓட்டு போடுமானால், நாம் எல்லோரும் புதிய கூடாரத்தை கட்டுவதில் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். வெளிப்படையாக எனக்கு அவர்கள் புதிய கூடாரத்தைப் பற்றி கூறினபோது, நான் அந்த எண்ணத்துக்கு எதிராக இருந்தேன். அது சரிதான். நான், “நமக்கு சரியாக புதிய கூடாரம் அவசியமில்லை. ஏனென்றால் தேவன் எனக்கு காண்பித்த அந்தக் காரியம் நிறைவேறும்போது, நான் இங்கிருந்து சீக்கிரத்தில் போக நேரிடலாம். ஆகையால் புதிய கூடாரத்தினால் நமக்கு அவசியம் என்ன? நம்மிடத்தில் அதற்க்கான பணமில்லையே”, என்றேன். 39அதன்பிறகு நான் இறங்கி வந்து, சபையின் உணர்வை உணர்ந்தேன்; அதாவது சபையின் பெரும்பான்மைக்கு புதிய கூடாரம் வேண்டும் என்று காணப்பட்டது. அதன் பிறகு நான் செய்தது என்னவென்றால், என்னுடைய சொந்த எண்ணங்களை தியாகம் செய்து சபையோடு கூடஒன்று சேர்ந்து கொண்டேன். நிச்சயமாக அதை நாம் செய்வோம். இவ்விதமாகத்தான் வேதாகம நாட்களிலும் சபையான துஓட்டுப்போட்டது. எனவே நாமும் அதேவிதமாகச் செய்யலாம். குழுவாகிய மக்கள் ஒருமித்துப் போகும்போது அது மேலான அதிகாரமாயிருக்கிறது. ஒற்றுமையில் பெலன் இருக்கிறது. ஆகவே,“நிச்சயமாக சபை அந்த விதமாக விரும்பும் பட்சத்தில், தேவனும் அதேவிதமாக விரும்பும்போது, அவர் எனக்கு ஓட்டு அளிப்பதைக் காட்டிலும், முழு மக்கள் கூட்டத்திற்கும் ஓட்டளிக்க அவர் முழு அதிகாரத்தையும் பெற்றவராய் இருக்கிறார், ஏனெனில் அதை அவ்விதம் செய்யக் கூடாது என்று கூறுவதற்கு நான் எந்த ஒரு தரிசனத்தையும் பெற்றிருக்கவில்லை”. எனவே நாம் சபையோடு கூட ஒன்று சேர்ந்து, சபையோடு கூட நகர வேண்டியதாயிருக்கிறது. பாருங்கள், சபைக்கு உதவி செய்யத்தக்கதாக என்னால் முடிந்த எல்லாவற்றையும் செய்ய நான் சபையின் பின்னாக இருக்கிறேன். 40சபையில் இருக்கிறதான ஒவ்வொரு நபருக்கும், ஒவ்வொரு கிறிஸ்தவனுக்கும், நாம் ஒற்றுமையாயிருந்து, இணைந்து இருக்க வேண்டும் என்ற ஒன்றே குறிக்கோளாக இருக்கவேண்டும். சபையானது எந்த ஒரு காரியத்தைக் குறித்து ஓட்டளிக்கிறதோ, அந்த காரியத்திற்காக நாம் நிற்க வேண்டியவர்களாய் இருக்கிறோம். உதாரணத்திற்கு சொல்வோமாகில், சபையில் ஏதோ காரியத்தை மாற்றி அமைக்க வேண்டும் எனக் கருதுவதாக வைத்துக் கொள்வோம். நல்லது, பிறகு, ஒருவேளை தர்மகர்த்தாக்கள் விரும்புவார்களானால், வேறு யாராவது விரும்புவார்களானால், உதவிக்காரர்கள், இவர்கள் ஏதோ காரியத்தை மாற்றி அமைக்க வேண்டும் என விரும்புவார்களெனில், அது ஒன்று கூட்டப்பட்ட சபைக்கு முன்பாக கொண்டு வரப்படுகிறது.ஒரு வேளை நம்முடைய எண்ணமானது, இந்தமுழு சபை கூறினதிலிருந்து சிறிது வேறுபட்டிருப்பது போல் காணப்படுமேயாகில், நம்முடைய எண்ணத்தை நாம் தியாகம் செய்வோமாக, ஏனெனில் அந்த ஒரு வழியில்தான் நாம் ஒன்றுபட்டவர்களாய் நிற்க முடியும். இப்பொழுது போகிறதுபோல அதே வழியில் இந்த சபையானது சென்று ஒன்றுப்பட்டு இருக்குமானல், தேவன் தாமே... நாம் மட்டும் ஒன்றுப்பட்டு இணைந்திருக்கும் பட்சத்தில் அவர் செய்வது அளவற்றதாயிருக்கும். நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும். அந்த விதமாகதான் நாம் முற்றிலும் ஒற்றுமையாக இருக்கவேண்டும். அப்பொழுது நாம் தாமே தேவனுடைய கரங்களில் முற்றிலுமாக வீற்றிருப்போம். 41மேலும், நாம் விசுவாசிக்கும் தேவனுடைய வார்த்தையை பிரசங்கிக்கிற ஒரு மனிதனை நாம் பெற்றிருக்கவேண்டும். அந்த மனிதனானவன் அதை செய்யாத பட்சத்தில், அதைச் செய்கின்றதான வேறு ஒரு நபரை நாம் பெற்றுக்கொள்ள வேண்டும். அந்த விதமாகத் தான் நாம் நிற்க வேண்டியவர்களாய் இருக்கிறோம். சரியான ஒரு காரியத்திற்காய் தர்மகர்த்தாக்களின் குழுவானது நிற்காத பட்சத்தில், சரியான காரியத்திற்காய் நிற்கின்ற தான ஒரு நபரை நீங்கள் தேர்ந்தெடுப்பது உங்களுடைய வேலையாய் இருக்கிறது. அப்படியாக நீங்கள் செய்யும் பட்சத்தில், நீங்கள் அதோடு தரித்து நிற்க வேண்டியவர்களாய் இருக்கிறீர்கள். அது உங்களைப் பொறுத்ததாய் இருக்கிறது. அதனோடு நில்லுங்கள். மேலும் நாம் எல்லோரும் ஒருமித்து ஒரு காரியத்திற்காய் நிற்கிறோம்; அது தேவனே. ஒரு அங்கத்தினர் தவறு செய்வாரேயாகில், அவரை புறக்கணிக்காதீர்கள்; அவருக்கு உதவிசெய்யுங்கள். அவரைத் தூக்கி நிறுத்துங்கள், ஒருமித்து இருங்கள், ஒருவரை ஒருவர் விசாரியுங்கள்.அதைத் தான் வேதாகமமானது நமக்கு போதிக்கிறது. நாம் தவறு செய்யும்பட்சத்தில், நாம் தேவனுக்கு முன்பாகச் செல்வோமாக. ஆனால், நாம் தேவனுக்கு முன்பாக போவதற்கு முன், நாம் யாரைத் புண்படுத்தினோமோ அந்த நபருக்கு முன்பாக போக வேண்டியவர்களாய் இருக்கிறோம். 42நான் அதைச் செய்ய வேண்டிய நிலைக்கு போனேன். நான் தவறு செய்தேன் என்பதை நான் அறிந்திருக்கிறேன்; நான் பொய் சொன்னேன். என்னுடைய மனைவியையும் பொய் சொல்ல வைத்தேன். அதைக் குறித்து நான் இங்கே சபையில் உங்களுக்கு அதைக் கூறியிருக்கிறேன் என்று விசுவாசிக்கிறேன். அது அனேக நாட்களுக்கு முன்பாக அல்ல, சில நாட்களுக்கு முன்பாக நடந்தது, அது ஆறு வாரங்களுக்கு முன்பாக இருக்கும். நான் எங்கே இருக்கிறேன் என்பதைக் கூட அறிந்துக்கொள்ள முடியாத அளவிற்கு, வழக்கறிஞர்கள் என்னை விசாரணை என்கிறதான பெயரில் அவ்வளவாக தொல்லை கொடுத்திருந்தார்கள். அப்பொழுதுதான் நான் என்னுடைய அலுவலகத்திலிருந்து, இரவு உணவை சாப்பிடுவதற்காக வீட்டிற்கு வந்திருந்தேன். அப்பொழுது எங்களுடைய தனிப்பட்ட தொலைப்பேசியானது ஒலித்ததனால் மீடா சென்று அதற்கு பதிலளிக்கும் படியாய் போனாள். அவள் தொலைப்பேசி மீது தன்னுடையக் கைகளை வைத்து மூடினவளாய், “மறுபடியுமாய் அந்த வழக்கறிஞர்கள் தாம்பேசுகிறார்கள்” என்று என்னிடத்தில் கூறினாள். இன்னொரு மாலைப் பொழுதுவரை என்னால் தாங்கிக் கொள்ளமுடியாது என்று, நான் கூறினேன். என் தலை தனியாக வந்து விடுவதைப்போல அது உணர்ந்தது. என்னை இந்த வழியாகவும், அந்த வழியாகவும், இந்த வழியாகவும் இழுக்கிறார்கள். என் சிந்தையை நான் இழந்துக்கொண்டிருக்கிறேன். என்னால் இதை பொறுத்துக்கொள்ள முடியாது என்று கூறிநான் எழும்பி குதித்து “நான்இங்கே உள்ளே இல்லை என்றுஅவர்களுக்கு சொல்லச்சொல்லி வீட்டிற்க்கு பின்னாக ஓடி விட்டேன்”. நான் திரும்பவுமாக வந்த போது, மீடா அந்த விதமான காரியங்களைக் குறித்தெல்லாம் மிகவும் நேர்மையாக இருப்பாள். ஏறக்குறைய அழுதவண்ணமாய் அவள் என்னை கதவண்டையில் சந்தித்து, அவள், “பில் நீங்கள் செய்த அந்தக் காரியம் சரியானது தானா?” என்றாள். நீ எப்படி இருக்கிறாய் என்பது உனக்கு தான் தெரியும் நான் எப்படி இருக்கிறேன் என்பது எனக்குதான் தெரியும், “நிச்சயமாக அந்த சமயத்தில் நான் இங்கே உள்ளே இல்லை” என்று கூறினேன். அதற்காக தேவன் என்னை குற்றவாளியாக்கினார் என்பதை நான் அறிந்துக் கொண்டேன். “நான் அந்த சமயத்தில் இங்கே உள்ளே இல்லையே” என்று கூறினேன். அவளோ “ஆனால், அவர் தொலைபேசியில் அழைத்தபோது நீங்கள் இங்கே உள்ளே இருந்தீர்கள் என்றாள்”. 43அந்த நாளின் மதிய வேளையில் வியாதியாயிருந்த ஒரு குழந்தைக்காக ஜெபிக்கும் படிக்கு நான் சென்றேன். நான் வீட்டை விட்டு வெளியே புறப்படுவதற்கு முன்பாக மறுபடியுமாக தொலைப்பேசி அழைப்பு வந்த போது, சிறுஜோசப் ஓடி அந்த தொலைபேசியை எடுத்து தன்னுடைய கையில் அதைப் பிடித்தவனாய், “அப்பா, நீங்கள் இங்கு இல்லை என்று அவர்களிடத்தில் நான் சொல்ல வேண்டுமா?” என்றான். பாவமானது எவ்வளவு களங்கப்படுத்துகிறது என்பதைப் பாருங்கள், முடிவில் அது எப்படிப்பட்ட குடும்பமாய் இருக்கும்? யோவான், 3-ம் அதிகாரம், 21-ம் வசனத்தில், “பிரியமானவர்களே நம்முடைய இருதயம் நம்மைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருந்தால், நாம் தேவனிடத்தில் தைரியங்கொண்டிருந்து” என்று கூறுகிறது. ஆனால், நம்முடைய இருதயம் நம்மைக் குற்றவாளியென்று தீர்க்கும் பட்சத்தில், நாம் தேவனிடத்தில் எப்படி தைரியங்கொள்ள முடியும்? நம்மிடத்தில் அறிக்கை செய்யாத பாவம் இருக்கும் வரைக்கும், தேவன் ஒருபோதும் நம்முடைய ஜெபங்களைக் கேடப்தில்லை என்பதை நாம் அறிந்திருக்கிறோம். இது கடுமையானதுதான், ஆனால், இந்த விதமான காரியங்கள் சபைக்கு அவசியமாயிருக்கிறது. 44பிறகு, நான் இந்தக் குழந்தைக்காக ஜெபிக்க ஆரம்பித்தேன். நான் என்னுடையக் கரங்களை அந்தக் குழந்தையின் மீதாக வைக்கத் துவங்கும் போது, கர்த்தர் என்னைக் கடிந்தவராய், “நீ பொய்யுரைத்தாய்; அந்தக் குழந்தைக்கு ஜெபிக்கின்ற தகுதி உனக்கு இல்லை” என்றார். நான் அந்த மனிதனிடத்திலிருந்து திரும்பினவனாய்; “ஐயா, நீங்கள் சற்று இங்கே காத்திருங்கள், நான் சரி செய்ய வேண்டியதான ஒரு காரியம் உள்ளது” என்று கூறினேன். பின்பு நான் அந்த வழக்கறிஞரை தொலைப்பேசியில் அழைத்து, அவருடைய அலுவலகத்திற்குச் சென்று, அவரை சந்தித்தேன். “இங்கே பாருங்கள் ஐயா, நான் பொய் சொன்னேன், என்னுடைய மனைவியையும் பொய் சொல்லும்படி செய்து விட்டேன்; அவள், நான் அங்கு உள்ளே இல்லை என்று கூறினாள். அப்பொழுது நான் வீட்டிற்கு பின்புறமாக ஓடி விட்டேன்”. மேலும் அவரிடம் அதை அறிக்கை செய்து அதைக் குறித்து அவரிடத்தில் கூறினேன். அவர் என்னிடத்தில் நடந்து வந்து, தன்னுடையக் கரங்களை என்னுடைய தோள்களின் மீது போட்டவராய், “சகோ. பிரான்ஹாம் நான் எப்போதுமே உங்கள் மீது நம்பிக்கை உள்ளவனாய் இருக்கிறேன், தன்னுடைய தவறுகளை திருத்தி சரிப்படுத்திக் கொள்ளும் மனிதனாகிய உங்கள் மீது அது எப்போதையும் விடஇப்பொழுது கூடுதலாய் இருக்கிறது” என்றார். நான் அவரிடத்தில், “ஒரு குழந்தைக்காக ஜெபிக்க தொடங்கினபோது உடனடியாக தேவன் என் இருதயத்தில் என்னை குற்றவாளியாக்கினார், ஏனென்றால் நான் தவறு செய்தேன் என்று எனக்கு தெரியும்”. அடுத்த நாள், என்னுடைய மனைவி என்னிடத்தில் “எங்கே போகிறீர்கள்” என்றுக் கேட்டாள். அதற்கு நான், “என்னுடைய குகைக்கு செல்கிறேன்”என்றேன். 45பின்பு நான் சார்ல்ஸ் டவுன் என்கிற இடத்தில் மேலே உள்ளே என்னுடைய குகைக்குச் சென்றேன், பல வருடங்களாக நான் போய்க் கொண்டிருக்கிறதான ஒரு இடம் அது. நான் அங்கே சென்று ஒருநாள் முழுவதும் ஜெபித்தேன், 'ஓதேவனே, என்னை ஒரு போதும் அவ்விதமான காரியங்களைச் செய்யும்படிக்கு மறுபடியும் விட்டு விடாதேயும். என்னை மன்னியும் தேவனே. நான் என்னுடைய கரங்களை வியாதியஸ்தர் மீது வைத்து ஜெபிக்கத் துவங்கின போது நான் குற்றவாளியாக கடிந்துக் கொள்ளப்பட்டேன்“. அன்றைய மாலைப் பொழுதில் ஏறக்குறைய மூன்று மணி அளவில் நான் வெளியே வந்தேன். அங்கே ஒரு பெரிய பாறை இருந்தது அந்த பாறையின் மேலே சென்று கிழக்கு பக்கமாக மேலே பார்த்தவனாய் என் கைகளை மேலே உயர்த்தி தேவனை துதித்து கொண்டிருந்தேன். அங்கே அவ்வளவு நிசப்தமாக இருந்தது. மேலும், ”தேவனே ஒரு விசை மோசேயை கன்மலையின் வெடிப்பிலே வைத்து அவனை கடந்து போனீர், அவன் அது மனுஷனுடைய பின்பாகத்தைப் போல காணப்பட்டது“ என்றான். ”அதை மறுபடியுமாக நீர்செய்வீரா தேவனே? என்றேன். அதன் மூலம் நான் மன்னிக்கப்பட்டேன் என்று அறிந்துக் கொள்ளட்டும்“. மேலும், 'நீர் மட்டும் எனக்கு உதவிசெய்து என்னுடைய சிந்தையில் வருவீரானால்...” “தேவனே நான் மன ரீதியாக பெலமுள்ளவன் கிடையாது. ஏனென்றால் எனக்கு கல்வியறிவு இல்லை”. மேலும் நான் உம்மை சேவிக்க பிரயாசப்படுகிறேன் என்றேன். என்னுடைய இருதயம் உமக்குதெரியும் மற்றும் நான் அவ்விதம் செய்திருக்கக் கூடாது. அதை அப்படிச்செய்ய வேண்டும் என்று செய்யவில்லை. என் தலை தனியாக வந்துவிடுவதைப் போல அந்த விதமாக நான் உணர்ந்தேன், மிகவும் தளர்ந்துபோய் இருந்தேன். சாத்தான் என்னை பிடித்த அந்த இமைப்பொழுதில் அதை செய்துவிட்டேன். “நீர் என்னை மன்னீப்பீரானால், மறுபடியும், உம்மை நான் பார்க்கட்டும் தேவனே” என்றேன். 46தேவன் தாமே என் நியாயதிபதியாய் இருக்கிறார். சரியாக என் பக்கவாட்டில் அங்கே, புதரில் உள்ள சிறிய இடமானது சுழல்காற்றைப் போல் சுற்ற ஆரம்பித்தது. அது சரியாக நான் இருந்ததான குகையின் பக்கவாட்டின் வழியாக வந்து, காட்டின் வழியாக கடந்து சென்றது. ஓ, சகோதரனே, எல்லா புத்திக்கும் மேலான சமாதானம் என் மேலாகக் கடந்துபோனது, நான் அழுதேன், நான் கதறினேன், நான் சத்தமிட்டேன். என்னுடைய பாவங்கள் எனக்கு மன்னிக்கப்பட்டது என்று நான் அறிந்துகொண்டேன். பாருங்கள், நான் தேவனோடு ஒருங்கினைப்பில் இல்லை. என்னால் அந்த குழந்தைக்கு விடுதலையை பெற முடியாமல் இருந்தது. 47அதற்கு அடுத்த நாளே சிகாகோவிலிருந்து ஒரு மனிதன் வந்திருந்தார், அவர் மகத்தான மனிதர், சமீபத்தில் தான் கத்தோலிக்கத்திலிருந்து மனமாறியிருந்தார், அவருடைய இருதயத்திலிருந்த குழாயானது காற்றடிக்கப்பட்ட டீயூபைப் போல வீங்கியிருந்தது, அதை அவர்கள் வெட்டி எடுக்கவேண்டும் என்று வெகு நாட்களாக முயற்சித்துக் கொண்டிருந்தார்கள், அவரோ அதை அவ்விதமாக செய்ய அவர்களை அனுமதிக்கவில்லை. கடைசியாக என்னை நேரிடையாக சந்திக்கும் வாய்ப்பைப் பெற்றார். தவறு என்ன என்பதை கண்டுபிடிக்கும் வரை நாங்கள் தொடர்ந்து அந்த நேர்காணலில் தரித்திருந்தோம். பரிசுத்த ஆவியானவர் அவனுடைய கடந்த கால ஜீவியத்தினூடாகச் சென்று அவன் கத்தோலிக்க சபையில் பிரசங்கபீட உதவியாளனாக இருந்தபோது செய்த ஏதோ காரியத்தை வெளிப்படுத்தின பிறகு அதற்கு மேல்அவன் அதை பெற்றிருக்கவில்லை. “அதுதான் உண்மை” என்று அவன் கூறினான். “அது உத்தமமான உண்மை” என்றான். அந்த காரியமானது எனக்கு எதிராக இருந்தது என்று எண்ணுகிறீர்களா? என்றான். அதற்கு நான், “உன்னுடைய ஜீவியத்தில் அந்த ஒரு நிழலைத்தான் பார்க்கமுடிந்தது என்று கூறினேன். பின்பு அவன் அந்த மருத்துவரிடத்தில் சென்று, “எல்லாம் சரிதான், நீங்கள் இப்பொழுது அறுவை சிகிச்சை செய்வதற்கான காரியங்களை ஆயத்தப் படுத்துங்கள்” என்றான். அதற்கு அந்த மருத்துவர், “நாம் அந்த பழைய அறிகுறிகளை மறுபடியுமாய் சரிபார்த்துக் கொள்வோம்” என்றார். அவர் அதைப் பார்த்த போது, “உங்களுக்கு அறுவை சிகிச்சை தேவைப்படாது” என்றார். பாருங்கள். 48“நம்முடைய இருதயமானது நம்மை குற்றவாளியென்று தீர்க்கும் போது”, நமக்கு முற்றிலுமான விடுதலை தேவைப்படுகிறது. நாம் ஒரு அரைகுறை சபையாக இருக்க விரும்புவதில்லை. நாம் இருந்தால் ஒரு உண்மையான சபையாய் இருக்கட்டும் அல்லது சபையே வேண்டாம். நாம் இருந்தால் உண்மையான கிறிஸ்தவர்களாக இருக்கட்டும் அல்லது கிறிஸ்தவர்களாக இருக்கவே வேண்டாம். நம்முடைய பழக்கவழக்கங்களிலிருந்தும், நம்முடைய பாவங்களிலிருந்தும், நம்முடைய தீயசிந்தைகளிலிருந்தும், நம்முடைய தீயசெய்கைகளிலிருந்தும், நம்முடைய அலட்சியப்படுத்து தலிலிருந்தும், நாம் செய்ததான எல்லாக் காரியங்களிலிருந்தும் நமக்கு முற்றிலுமான விடுதலை தேவைப்படுகிறது. நமக்கு முற்றிலுமான விடுதலை அவசியம் ஏனென்றால் ஜெபம் செய்து கொள்வதற்காக மக்கள் இந்த சபைக்குள்ளாக வரும்போது, இங்கே இந்த சிறிய கூட்டம் மட்டும் (நூறு அல்லது இருநூறுக்கு மேலாக அல்ல) அமர்ந்திருக்கும், ஆனால் அவர்களோ தேவனுடைய கரங்களில் முற்றிலுமாக வீற்றிருப்பார்கள். அப்பொழுது அவர்கள் ஜெபிக்கும்போது தேவன் தாமே பரத்திலிருந்து கேட்பார். தன்னுடைய கரங்களில் பிடித்துக் கொள்ளக்கூடிய யாரவது ஒருவர் தேவனுக்கு தேவைப்படுகிறது.தேவன் இவ்விதமாக சொல்லக்கூடிய யாராகிலும், அது “எனக்கு இவர்கள் மீது நம்பிக்கை இருக்கிறது, நான் இந்த என்னுடைய சுகவீனமான ஊழியக்காரனை, ஜெபர்சன்வில்லில் உள்ள பிரான்ஹாம் கூடாரத்திற்கு அனுப்புவேன் ஏனென்றால் அந்த ஜனக் கூட்டமானது ஏகமனதாயிருக்கிறார்கள்”, எனவே ஏதோ காரியம் நிச்சயமாக நிகழும். 49நல்லது, நாம் இப்பொழுது இருக்கிறதான இந்த நிலையில் தேவன் நமக்கு எப்படியாய் செய்கிறார் என்று கவனியுங்கள்; நாம் எல்லோரும் ஏக மனதுடனும், ஏக சிந்தையுடவர்களாயும் இருக்கும்போது அவர் என்ன செய்வார் தெரியுமா? நாம் இவ்விதமாக இருப்பதற்க்கான ஒரே வழி, நம்முடைய இருதயங்கள் சகோதர சிநேகத்தால் இணைக்கப்பட்டும், சபையினுடைய அலுவலர்களுக்கும், மேய்ப்பருக்கும் கீழ்படிந்தும், மற்றும் மேய்பரும் தேவனுக்கு கீழ்ப்படிந்து இருப்பதின் நிமித்தமே. அதன்பிறகு தேவன் தாமே மேய்ப்பர் மூலமாகவும், சபை அலுவலர்கள் குழு மூலமாகவும் சபைக்குள்ளாக கிரியை செய்வார். பின்பு நாம் எல்லாரும் சேர்ந்து தேவனுடைய இராஜ்ஜியத்திற்கென்று ஒரு கூட்ட மக்களாக இருப்போம். அப்படி ஒற்றுமையான குழுவாக இருக்கும் பட்சத்தில், தேவன் நம் ஜெபத்தை கேட்பார். எந்தக் காரியமும் உங்களை தொல்லைப்படுத்த வேண்டாம், எதைக் குறித்தும் பயப்படவேண்டாம். இப்பொழுது, தேவன் அந்த விதமான மனிதனைக் கொண்டு தான்தேசத்தை பிடித்துக் கொள்ளும்படிக்கு நியமித்திருக்கிறார். மோசே முற்றிலுமானவன்; அவன் ஒப்புரவாகாத ஒரு மனிதன். அசௌகரியமானநிலை, தேவையல்லாத சச்சரவுகள் மற்றும் அது போன்ற காரியங்கள் இருக்குமானால் அவன் அதனோடு ஒப்புரவாக மாட்டான். நாமும் அந்தவிதமாக இப்பொழுது இருக்கவேண்டும் என்று தேவன் விரும்புகிறார். 50பார்வோன் சம்மதிக்க விரும்பி, மோசேயினிடத்தில், “மோசே நீங்கள் எல்லோரும் போகலாம், ஆனால் உங்கள் பிள்ளைகளையும் அல்லது உங்கள் கால் நடைகளில் சிலவற்றையும் இங்கே விட்டுச் செல்லுங்கள் என்றான்”. அந்த விதமாகத்தான் சாத்தானும் ஒரு கிறிஸ்தவன் வர வேண்டுமென விரும்புகிறான்.“நீ ஒரு சபையில் சேர்ந்துகொள்ளலாம், அது பரவாயில்லை, ஆனால் நீ ”ஜோன்ஸ்“ ஐ ஒரு போதும் மன்னித்து விடாதே. நீ உள்ளே வர விரும்பினால் உன்னுடைய புகைப்பிடித்தலையும், உன்னுடைய குடிப்பழக்கத்தையும், உன்னுடைய பொய் பேசுதலையும், உன்னுடைய திருட்டுத்தனத்தையும், உன்னுடைய குறைகண்டு பிடிப்பதையும், புறங்கூறுதலையும் விட்டுவிட வேண்டிய அவசியமில்லை. அதையெல்லாம் விட்டுவிட வேண்டுமென்றில்லை. வெறுமென சபையில் சேர்ந்துகொள். ஆனால், மோசே சமரசவாதியாய் இல்லை; அவன் முற்றிலுமான விடுதலையைக் கேட்டான். அவன், “நாங்கள் ஒரு குளம்பைக் கூட விட்டு விடப்போவதில்லை, எங்கள் கர்த்தரைத் தொழுதுகொள்ளப் போகும் போது, எங்களுக்கு உரியதான யாவற்றையும் எடுத்துக் கொண்டு போவோம்” என்றான். 51அந்த விதமாகத்தான் சபையும் இருக்க வேண்டியதாய் உள்ளது. “நாம் நீதியையும், பரிசுத்தத்தையும், பரிசுத்த ஆவியையும் எடுத்துக்கொண்டு ஒற்றுமையான கூட்டமாய் பலிபீடத்தண்டையில் சேரக்கடவோம். நாம் ஒரு உண்மையான கூட்டமாக இருப்போம், நாம் எதையும் இங்கேவிடப் போவதில்லை. நாம் எல்லாவற்றையும் எடுத்துக்கொள்வோம். ஒரு குளம்பையும் நாம் இங்கே பின்னுக்கு விட்டு வைக்கப் போவதில்லை”. பிசாசு தன் பிடியை விட்டுவிடும்படி அவ்விதமாக மக்கள் ஜெபிக்க முடியும் என்பதை நீங்கள் அறிவீர்கள். 52அந்த விதமாகத்தான் மோசேயும், அவனுடைய கூட்டத்தாரும் செய்தார்கள். அவர்கள் அங்கே சென்று இரத்தத்தின் கீழாக இருந்தார்கள். அவர்கள் முழுவதும் இரத்தத்தின் கீழாக வரும் மட்டும், முற்றிலுமான விடுதலையைப் பெற்றுக் கொள்ளவில்லை என்பதை நீங்கள் கவனித்தீருப்பீர்கள். மோசே அவன் தாமே தேவனுடன் ஐக்கியப்பட்டிருந்தான், ஆனால் இஸ்ரவேலரோ அந்த விதமாக இல்லை, இன்னுமாக அவர்களிடத்தில் பாவம் இருந்தது. அவர்கள் மோசேக்கு விரோதமாக முறுமுறுத்தார்கள், அவர்கள் “ஏன், ஏன் இதை நீ செய்தாய்? எங்கள் மீது அதிகமான தொல்லையைக் கொண்டு வந்திருக்கிறாய்”. ஏனென்றால், பார்வோன் எங்கள் மீது செங்கல் உற்பத்தி எண்ணிக்கையை இருமடங்காகக் கூட்டி மற்றும் அது போன்ற வேறு காரியத்தையும் செய்திருக்கிறான். மோசே, அவன் தேவனுடைய மந்தையை மேய்க்கும்படிக்கு ஆடுகளை மேய்ப்பதிலிருந்து முற்றிலுமாக விடுவிக்கப்பட்டு தேவனுடைய கரங்களுக்குள் முற்றிலுமாக இருந்தான். அவன் தாமே முற்றிலுமாக விடுவிக்கப்பட்டவனாய் இருந்தான். ஆனால் அந்த மக்களோ விடுவிக்கப்படாமல் இருந்தார்கள். ஏனென்றால் அவர்களுக்குள்ளாக இன்னுமாக முறுமுறுத்தல் இருந்தது. 53ஒரு இரவில் கிறிஸ்துவுக்கு அடையாளமாக இருந்த ஆட்டுக் குட்டியானது கொல்லப்பட வேண்டும் என்று தேவன் நியமித்த பின்பு இரத்தமானது ஈசோப்பிலே தோய்க்கப்பட்டது, ஈசோப்பு, (சாதாரணமான, எளிமையானதற்க்கு அடையாளம்) அது வெறுமென களைகள். அதன் பிறகு இரத்தமானது வாசல்களின் நிலைக்காலிலும் தூண்களிலேயும் பூசப்பட்ட பின் இஸ்ரவேல் ஒரு குளம்பையும் விட்டுவைக்காமல் முற்றிலுமாக விடுவிக்கப்பட்டது. அவர்களுக்கு உரியதான யாவும் விடுவிக்கப்பட்டது. அவர்கள் முழுவதுமாக அந்த இரத்தத்தின் கீழாகவந்த போது, அவர்களுடைய குடும்பங்கள், அவர்களுக்கு நேசமானவர்கள், அனைத்தும் விடுவிக்கப்பட்டது. 54எல்லா காரியங்களும் இரத்ததின் கீழாக வரும் போதுமட்டுமே, சபையானது முற்றிலுமான விடுதலையைப் பெற்றுக் கொள்ள முடியும். உங்களுடைய பாவங்கள் இரத்தத்தின் கீழாக வரும்போது - உங்களுடைய புகைப்பிடித்தல், உங்களுடைய சூதாட்டம், உங்களுடைய ஏமாற்றுதல், உங்களுடைய திருடுதல், உங்களுடைய பொய்யுரைத்தல், ஆகிய அனைத்தும் இரத்தத்தின் கீழாக கொண்டு வரப்படும்போது அப்பொழுது உங்களுக்கு ஒரு முற்றிலுமான விடுதலை கிடைக்கும். நீங்கள் யாருக்காவது தவறு இழைத்திருப்பீர்களானால் அதை சரி செய்துக்கொள்ளுங்கள், நீங்கள் அதை இரத்தத்தின் கீழாக கொண்டு வரமுடியாது, அது நிலைத்திருக்காது. அதை நீங்கள் கொண்டுவரவும் முடியாது. ஏதோ ஒரு காரியம்அதை செய்யும்படிக்கு உங்களை அனுமதிக்காது. நீங்கள் தாமே முற்றிலுமாக, முழுவதுமாக இரத்தத்தின் கீழாக வரும்போது, அங்கே ஒரு முற்றிலுமான விடுதலை உண்டாயிருக்கும். அதன்பிறகு நீங்கள் இதற்கு முன் அறிந்திராத விடுதலையை பெற்றுக்கொள்வீர்கள். ஒவ்வொரு காரியமும் இரத்தத்தின் கீழாக கொண்டுவரப்பட்டு, தேவனுடைய இராஜ்ஜியத்திற்கு முற்றிலுமான கீழ்படிதலுக்கு கொண்டுவரப்படும் போது, தான் ஒரு உண்மையான விடுதலை உண்டாயிருக்கும். 55இயேசுவானவர் முழுவதுமாக, முற்றிலுமான ஒரு மனிதனாக இருந்தார். அவரால் ஒரு மனிதனைப் போல் அழமுடிந்தது, அவரால் ஒரு மனிதனைப் போல் புசிக்க முடிந்தது; அவர் ஒரு மனிதனைப் போல் வாழ்ந்திருக்கமுடியும். அவர் முழுவதுமாக, அவருடைய மாம்ச சரீரத்திலே, முற்றிலுமான ஒரு மனிதனாக இருந்தார். ஆனால், அவருடைய ஆவியில் அவர் முழுவதுமாக, முற்றிலுமாக தேவனாக இருந்தார், ஆகவே அவருக்குள்ளாக இருந்த ஆவிக்கு அவருடைய மாம்சத்தை கீழ் படிந்திருக்கும்படி செய்தார். பாருங்கள், நம்மைப் போல அவர் எல்லா விதத்திலும் சோதிக்கப்பட்டார். அவர் ஒரு மனிதனாகவே இருந்தார், தேவதூதனாய் அல்ல. அவர் ஒரு மனிதனாக இருந்தார். நமக்கு இருப்பது போல அவருக்கும் வாஞ்சைகளும், கவர்ச்சிக்கு உட்படுதலும் இருந்தது. வேதமானது அவர் அப்படியாகத்தான் இருந்தார் என்று கூறுகிறது. அவர்ஒரு மனிதனாகவே இருந்தார், சோதனைகளுக்கு அப்பாற்பட்ட ஒரு தேவதூதனாய் அல்ல. எபிரெயர் 1-ல் அவர் அவ்விதமாகதான் இருந்தார் என்று கூறுகிறது. எபி: 1:4- இல் அவர் தேவதூதர்களைக் காட்டிலும் சிறியவராக உண்டாக்கப்பட்டிருந்தார். அவர் மனிதனாக இருந்தார்,முழுவதும் மனிதனாக, ஒரு முற்றிலுமான விடுதலையைக் கொண்டு வரும்படிக்கு, தேவன் ஒரு முற்றிலுமான மனிதனை எடுத்து, தம்முடைய ஆவியால் அவரை நிரப்பினார். அளவிட முடியாத அளவிற்கு பரிசுத்த ஆவியானவர் அவருக்குள்ளாக இருந்தார். நம்மைப் போலவே அவரும் சோதனைக்குட்பட்டார். அவர் முழுவதும் தேவனாக இருந்தார். அவர் மரித்தவர்களை உயிரோட எழுப்பின போதும், சீறுகின்ற கடலையும், பெருங்காற்றையும் இயற்கையை நிறுத்தின போதும், அவர் தாம் தேவன் என்பதை நிரூபித்தார். அவர் மரங்களிடத்தில் பேசும் போதும் மற்றும் அந்த விதமாக செய்யும்போதும் அவைகள் அவருக்கு கீழ்படிந்தன. உள்ளுக்குள் அவர் தேவனாக இருந்தார். அவர் மனிதனாக இருந்தபடியால் மனிதனைப் போல அவரால் ஜீவித்திருக்க முடியும், ஆனால் அவரோ தேவனுடைய பணிக்கென்று, தம்மை தாமே மனிதனாக இருப்பதிலிருந்து, தேவனுடைய கரங்களில் முழுமையாகவும், முற்றிலுமாகவும் ஒப்புக்கொடுத்தார். 56அவரே, நம்முடைய உதாரணமாய் இருக்கிறார். நாம் புருஷர்களும், ஸ்திரீகளுமாய் இருக்கிறோம். மேலும் நாம் கிறிஸ்தவர்களாக இருக்கிறோம். அவரே நம்முடைய உதாரணமாயிருப்பாரகில், நாம் தேவனுடைய இராஜ்ஜியத்தின் பிரஜைகளாயிருக்கும் பொருட்டு நாம் பரிசுத்த ஆவியானவரின் கரங்களில் நம்மை முற்றிலுமாக ஒப்புக்கொடுப்போமாக. அவர் முற்றிலுமான மனிதனாகவும் இருந்தார், அவர் முற்றிலுமான தேவனாகவும் இருந்தார். ஆனால் அவரோ அவருடைய இயற்கையான அவயங்களை... அவருடைய சரீர அவயங்களையும், அவருடைய சொந்த சிந்தனையையும், அவருடைய சொந்த செய்கையையும், அவருடைய சொந்த விருப்பங்களையும் அவருக்கு ஒப்புக்கொடுத்து “நான் பிதாவுக்கு பிரியமானதை மட்டுமே செய்வேன்” என்று ஜீவித்தார். அதுதான் காரியம். முற்றிலுமாக மனிதர்களிலிருந்து விடுவிக்கப்பட்டு இருந்தார். மகத்தான மனிதர்களும், ஆசாரியர்களும் அவரிடத்தில் வந்து, அவரை, “ரபீ மற்றும் இன்னார் இன்னார்” என்ற புகழ்ச்சி என்னும் வஞ்சத்தினால் அவர்களுடைய ஸ்தாபனங்களிலும் அதை சார்ந்தவைகளிலும் சேர்ந்துக் கொள்ளும்படி வலியுறுத்தினார்கள், ஆனால் அவரோ தேவனை நம்பிருந்தபடியால் அவர் முற்றிலுமாக விடுவிக்கப்பட்டிருந்தார். சங்கீதக்காரன் இப்படியாகக் கூறவில்லையா, “அவன் என்னை முற்றிலுமாக நம்பியிருக்கிறபடியால், நான் அவனை விடுவிப்பேன்” பாருங்கள். அவன் என்னை நம்பியிருக்கிறபடியால், “நான் எனக்கு பிரியமானவனை நாய்களிடத்திலிருந்து விடுவிப்பேன்”. 57எந்த நேரத்திலும் நம்முடைய ஜீவியத்தின் முடிவுக்கு நாம் வரும்போது, எனக்கும் அவ்விதமாக நடக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நீங்களும், அது உங்களுக்கு வேண்டும் என்று விரும்புவதை நான் அறிந்திருக்கிறேன். அவர் இப்படியாக கூறும்படிக்கு விரும்புகிறேன், “அவன் என்னை நம்பியிருக்கிறபடியால், நான் அவனை மரணப்பிடியிலிருந்து இரட்சிப்பேன். அவனை உயிர்த்தெழும் அந்த காலையில், கல்லறையிலிருந்து விடுவித்து, அவன் என்னை நம்பியிருக்கிறபடியால் அவனுடைய ஆத்துமாவையும், சரீரத்தையும், ஆவியையும் முற்றிலுமாக விடுவிப்பேன்”. 58இயேசுவின் எல்லாக்கிரியைகளும் முழுமை பெற்றதாக இருந்தது. எல்லாம் முழுமையானதாகவும், முற்றிலுமானதாகவும், விடுதலையைப் பெற்றதாகவும் இருந்தது. அவர் அந்தக் குஷ்டரோகியை, அவனுடைய குஷ்டத்திலிருந்து முற்றிலுமாய் விடுதலையாக்கினார். உதிரப் போக்கினால் அவதியுற்றிருந்த அந்த ஸ்திரீயை அதிலிருந்து அவர் முற்றிலுமாய் விடுதலையாக்கினார். அவர் பாவ பரிகாரத்தின் நாளில் மரித்தபோது, இந்த உலகத்தை அதன் பாவத்திலிருந்து முற்றிலுமாக விடுதலையாக்கினார். அவர் ஒவ்வொரு பாவத்திலிருந்தும் முற்றிலுமாக விடுதலையாக்கினார். அவர் சபையை விடுதலையாக்கினார். எனவே நாம் சிலாக்கியத்திற்கு கீழானமக்களாக ஜீவிக்க வேண்டிய அவசியம் இல்லை. நாம் தோற்க்கடிக்கப்பட்ட நிலையில் ஜீவிக்க வேண்டிய அவசியமில்லை, ஏனென்றால் அவர் பிசாசை தோற்க்கடித்து எல்லா துரைத்தனங்களையும், வல்லமைகளையும் கைப்பற்றி அதை தன்னுடைய பாதங்களுக்கு கீழ்ப்படுத்தினார்,மேலும் அவைகள் உங்களை ஆளுகை செய்வதற்கு எந்த ஒரு சட்டபூர்வமான உரிமைகளும் கிடையாது. நாம் பரிசுத்த ஆவியினால் நிரப்பட்ட கிறிஸ்த்தவர்களாயிருக்கிறோம். எனவே பிசாசு நம்மீது சர்வாதிகாரம் செலுத்த முடியாது. கிறிஸ்து நம்மை விடுதலையாக்கினார், முற்றிலுமான விடுதலை; தீமையிலிருந்து நம்மை விடுதலையாக்கினார், பாவத்திலிருந்து நம்மை விடுதலையாக்கினார், பழக்கவழக்கத்திலிருந்து நம்மை விடுதலையாக்கினார், வீண் பேச்சிலிருந்து நம்மை விடுதலையாக்கினார். கனவீனமற்ற காரியங்களிலிருந்து நம்மை விடுதலையாக்கினார், நம்மை கறைப்படுத்துகிறதான எல்லாக் காரியங்களிலிருந்தும் நம்மை விடுதலையாக்கினார். அவர் நம்மை முற்றிலுமாக விடுவித்து, அவருடைய பரிசுத்தமான கரங்களில் நம்மை வைத்தார். ஒரு முழுமையான முற்றிலுமான விடுதலை. 59அவர் நம்முடைய வியாதியை சுகமாக்கினார். அவர் வியாதிலிருந்து நம்மை விடுதலையாக்கினார், ஏனென்றால் அதற்கான உரிமைப் பத்திரம் நம்மிடத்திலிருக்கிறது. அல்லேலுயா‚ “நம்முடைய மீறுதலினிமித்தம் அவர் காயப்பட்டார். அவருடைய தழும்புகளால் நாம் குணமானோம்”. அவரே நம்மை சுகமாக்குகிறவர். ஆதலால் தான் புற்று நோயினால் மரித்துக் கொண்டிருந்த கணவனை பிரயாசத்தோடு பராமரித்துக் கொண்டிருந்தஅந்த சிறிய பரிதாபமான போலியோ பாதிப்புக்குள்ளான ஸ்திரியானவள் உண்மையான தேவனுடைய பிரசன்னத்துக்குள் நுழைந்தாள். அவளுக்கு விசுவாசம் இருந்தது. மருவத்துவர்கள் செய்ய வேண்டியதையெல்லாம் செய்தார்கள், ஆனாலும் அவள் தேவனுடைய ஆலோசனைகளை பின்பற்றி முற்றிலுமான விடுதலையை பெற்றுக் கொண்டாள். 60சீஷர்களும் முற்றிலுமான விடுதலையைப் பெற்றிருந்தார்கள். நிச்சயமான, முற்றிலுமான விடுதலை. ஏன்? ஏனெனில் அவர்கள் முழுவதுமாக, முற்றிலுமாக பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டிருந்தார்கள். நீங்கள் வெறுமனே ஒரு சபை அங்கத்தினராய் இருந்துக் கொண்டு, மேய்ப்பரின் கைகளைக் குலுக்கியும், அல்லது ஏதோ ஒருவிதமான சிறிய அனுபவமான குதித்தலையும், சத்தம்போடுதலையும் அல்லது அந்நிய பாஷைகளை பேசுவதையும் அல்லது அதைப் போன்ற ஏதோ ஒரு காரியத்தை பெற்றிருந்தும்; இன்னுமாக உங்கள் இருதயத்தில் கபடத்தையும், வினோதமான செய்கைகளையும், பொய் கூறுதலையும், சிகரெட் பிடிப்பதையும், ஸ்திரீகளை இச்சித்துக் கொண்டும் இருப்பீர்களேயாகில் அங்கே ஏதோ காரியமானது இன்னுமாக சம்பவிக்கவில்லை. அங்கே ஏதோ காரியம் தவறாக இருக்கிறது, “உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்பு கூறாதிருங்கள். ஒருவன் உலகத்தில் அன்பு கூர்ந்தால்அவனிடத்தில் பிதாவின் அன்பு இல்லை”. நீங்கள் தவறாக வழி நடத்தப்பட்டிருக்கிறீர்கள். “அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்”. 61நாம் யாவரும்பரிசுத்த ஆவியினாலே ஒன்றுபட்டிருக்க விரும்புகிறோம். ஒவ்வொரு அங்கத்தினரும் ஒருவருக்கொருவர் ஒன்றுபட்டிருக்க வேண்டும். தேவனுடைய அன்பானது, பரிசுத்த ஆவியின் மூலம், தூரத்திலுள்ள நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கிறது. அது நம்முடைய எல்லா அநீதியிலிருந்தும் நம்மை சுத்தமாக்குகிறது. நாம் இந்த உலகத்தின் காரியங்களிலிருந்து விடுவிக்கப்பட்டவர்களாய் இருக்கிறோம். இயேசுவானவர், “நீங்கள் ஒருவருக்கொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால் அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லா மனுஷரும் அறிந்து கொள்வார்கள்” என்றார். ஒரு அங்கத்தினர் மற்ற அங்கத்தினரை அதிகமாய் நேசிக்கும் போது, அது அந்த அங்கத்தினருக்காக மரிக்கவும் செய்யும். 62ஒரு தீமையான காரியம் நடக்க ஆரம்பிக்குமானால், வெளி உலக ஸ்திரிகளில் சிலர் வந்து, “இப்பொழுது பார் அன்பே, நீங்கள் இதையோ அல்லது அதையோ செய்திருந்தாலோ, இதை உடுத்தியிருந்தாலோ, இதை, அதை செய்தும், மற்றும் அந்த பரிசுத்த உருளைகள் கூட்டத்தை விட்டு வெளி வந்திருந்தால் உங்களுக்கு நலமாய் இருந்திருக்கும்”, என்று கூறுவார்கள். நாம் வெகுவாக தேவனுடன் இணைக்கப்பட்டு இருக்கிறோம்‚ நீங்கள் கூறலாம், “சகோதரன் பிரான்ஹாம், அது மிகவும் மோசமான சோதனையான காரியமாய் இருக்கிறதே” என்று. ஆனால், கிறிஸ்து அந்த நோக்கத்திற்காக தான் மரித்தார். பிசாசானவன் தோற்கடிக்கப்பட்டான். நமக்கு முற்றிலுமான விடுதலை தேவைப்படுகிறது. நமக்கு தூய்மையும், சுத்தமுமான, கலப்படமில்லாத, ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினால் கழுவப்பட்டு, பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்ட, அடையாளங்களும், அற்புதங்களும், அதிசயங்களையும் கொண்ட சபை நமக்கு வேண்டியதாய் இருக்கிறது. (ஒலி நாடாவில் காலியிடம்)... அனைவரையும் முற்றிலுமாக விடுவிக்கிறது. 63அன்பான தேவனே, காரியங்கள் முற்றிலுமான விடுதலையை பெறாத பட்சத்தில் அதை நீர் ஏற்றுக் கொள்வதில்லை. கறைப்படிந்ததான எந்த ஒரு பலியையும் நீர் ஏற்றுக் கொள்வதில்லை. தன்னுடைய ஜீவியத்திற்குப் பின்னால் பாவத்தையுடைய எந்தஒரு மனிதனின் ஜெபத்தையும் நீர் ஒருகாலும் ஏற்றுக் கொள்வதில்லை. அதை வெறுமென உம்மால் செய்யமுடியாது, தேவனே. கடந்து சென்ற நாட்களிலும் நீர் அவ்வாறு செய்யவில்லை, எனவே இன்றைய தினத்திலும் அவ்வாறு உம்மால் செய்ய முடியாது. ஆனால் அந்தப் பலியானது கறைதிரையற்றதாக இருக்க வேண்டியதாய் உள்ளது. தேவனாகிய கர்த்தாவே, நாங்கள் எங்களை ஒரு அர்பணிக்கப்பட்ட ஜீவியமாக, பலிபீடத்தின் மேல் வைக்கும்போது, ஓ கர்த்தாவே, பாவமாகிய எல்லா கறைகளையும் எங்களிலிருந்து நீக்கிவிடும். இந்தக் காலைவேளையில் நான் என் ஆத்துமா, என் சரீரம், என் பெலன், என் பிரயாசங்கள் யாவற்றையும் இந்த சபையோடு கூட பலிபீடத்தின்மேல் முற்றிலுமாக சமர்ப்பிக்கிறேன். உம்முடைய இரத்தத்தால் எங்களை சுத்திகரித்து, நாங்கள் செய்ததான எல்லா பாவங்களையும் எங்களுக்கு மன்னித்தருளும். மகத்தான பரிசுத்த ஆவியானவர் தாமே, மிகவும் ஐசுவரியமாக எங்களுக்குள்ளே வாசம் செய்வாராக, மற்றும் அவருடைய பிரசன்னமானது, இந்த கூடாரத்திலிருந்து, இந்த காலையில் நம்முடனே கூட வருவதாக, அதினிமித்தம் அவர் நம்மை மன்னித்தார் என்று நமக்குள்ளே நாம் அறிந்து கொள்ளமுடியும். அதன்பிறகு எங்களுடைய ஜெபமானது, 'நாங்கள் எங்கள் கடனாளிகளுக்கு மன்னிக்கிறது போல, எங்கள் பாவங்களை எங்களுக்கு மன்னித்தருளும்“ என்பதாய் இருக்கும், இதை அருளும் கர்த்தாவே. நாங்கள் மறுபடியுமாக இந்த மாலை ஆராதனையில் சந்திக்கும்மட்டும் நீர் எங்கள் அருகாமையில் இருந்து, எங்களை ஆசீர்வதித்து, பாதுகாப்பீராக. நீர் எங்களை புறக்கணித்துவிடாதபடிக்கு நாங்கள் சுத்தமான கரங்களோடும் தூய்மையான இருதயத்தோடும் உள்ளே வரட்டும், ஏனென்றால் நாங்கள் இந்த உலகத்தின் வெளிச்சமாயிராதபடிக்கு செய்யும் எந்த ஒரு காரியத்திலிருந்தும் எங்களுக்கு ஒரு முழுiமாயன, முற்றிலுமான விடுதலை தேவை, ஆண்டவரே. குன்றின்மேல் வைக்கப்பட்ட விளக்காகவும், மரக்காலால் மூடப்பட்டதாக இல்லாமல், ஆனால் மக்களின் பாதங்களுக்கு வெளிச்சத்தை காண்பித்து சரியான பாதையில் வழிநடத்தும் குன்றின்மீது வைக்கப்பட்ட விளக்காக இருக்கட்டும். இதை அளியும் பிதாவே இதை இயேசுவின் நாமத்தினாலே அவருடைய மகிமைக்கென்று வேண்டிக்கொள்கிறோம், பிதாவே ஆமென். 64நான் டாக் அவர்களை கேட்கப் போகிறேன், அவர் அங்கே பின்னால் இருக்கிறார் என்று நான் நினைக்கிறேன், அல்லது டீக்கன் மார்களில் ஒருவர் செய்யலாம். சபையானது இதை படிக்கும்படிக்கு, டாக் அவர்களே, நீங்கள் இங்கே வந்து அறிவிப்புப் பலகையில் இதைப் போட வேண்டுமென விரும்புகிறேன், எனவே சபை மக்கள் கடந்துச் செல்கிறதான வேளையில் அதைப் பார்த்துபடித்து செல்ல ஏதுவாயிருக்கும். மேலும், சகோதரன் காலின்ஸ் அவர்கள், இங்கு இருப்பாராகில்..... சகோதரன் காலின்ஸ் அவர்கள் உள்ளே இருக்கிறாரா? அவரிடம் இந்த மற்றொன்றைக் கொடுத்து விடுங்கள். எல்லாம் சரி, ஐயா, மேலும் நாம் என்ன காரியம் என்பதைப் பார்போம் (சகோ. பிரான்ஹாம் பேசுவதை நிறுத்தி, மெதுவாக, கொடுக்கப்பட்ட சீட்டை படிக்கிறார்). அது யாரோ ஒருவருக்கு நேர்காணல் தேவைப்படுகிறதாய் இருக்கிறது. அது எப்பொழுதும் கொடுக்கப்படும். அதற்க்காக நாங்கள் களிகூறுகிறோம். மேலும் எனக்கு நேர்காணல்கள் (இன்டர்வியு) இருக்கிறது. பாருங்கள், நீங்கள் செய்ய வேண்டியகாரியம் என்னவெனில், அங்கிருக்கிறதான எங்களுடைய அந்த எண்ணை அழைக்கவேண்டும். நாங்கள் அங்கே எங்களுடைய இல்லத்தில் அனேக பிரச்சனைகளை உடையவர்களாய் இருந்தோம் அந்தக் காரியங்களை சபையானது அறிந்திருக்கிறது. இவர்கள் அந்நியர்களாயிருக்கிறார்கள். இந்த சபையானது அதைக்குறித்து அறிந்திருக்கிறது. ஒரு சிறிய துண்டானது அங்கே வைக்கப்படவேண்டும்... வருகிறவர்களுக்காக நான் அதை இங்கே சபையில் வைக்கட்டும். பாருங்கள். அதிகமானவர்கள் இருப்பதால், அவர்கள் எல்லோரையும் நாங்கள் கவனிக்க கூடாமற் போகிறது, அவர்கள் எண்ணிக்கையில் அதிகமாக வருகிறார்கள். பாருங்கள். நீங்கள் வெறுமென பட்லர் 2-1-5-1-9 ஐ அழைத்தால் போதும்-பட்லர். மற்றும் அங்கத்தினர்களில் எவராகிலும் அது (நேர்காணல்) அவர்களுக்கு தேவைப்படுவதை பார்க்கும் போது, நான் மக்களை (அவர்களை) சந்திப்பதில் எப்பொழுதும் மகிழ்ச்சியுள்ளவனாயிருக்கிறேன். ஆனால் நாம் எப்பொழுதும் பின்பற்றுகிற முறைமை நமக்கு இருக்கிறது. ஏற்கனவே பலமுறை அழைத்தவர்கள் அநேகர் இருக்கிறார்கள், பாருங்கள். நாங்கள் அவர்களை சந்திக்க வரும்போது ஒருவர் பின் ஒருவராக சந்திக்கிறோம். அதன்பிறகு, எங்களுக்கு ஒழுங்கு செய்யப்படாத காரணத்தால் பாதிப்பு இருந்ததின் நிமித்தம் ஏதோ வழியில் தவிர்த்து, கடந்து செல்லவேண்டியதாய் இருந்தது, மக்களும் ஏமாற்றம் அடைந்தவர்களாய் வீட்டிற்கு சென்றார்கள் மற்றும் ஏனைய காரியங்களும். இப்பொழுது அவர்களுக்கு எல்லாம் ஒழுங்கில் வைக்கப்பட்டிருக்கிறது, பாருங்கள். எல்லாவற்றையும் சரியாக ஒழுங்கும் கிரமுமாக வைக்கவேண்டும் என்று அதைக் குறித்துதான் இப்பொழுது பேச முயன்று கொண்டிருக்கிறோம். இவர்கள் வெறுமென பட்லர் 2-1-5-1-9ஐ அழைப்பார்களானால், இந்த அன்பானவர்களை சந்திப்பதில் நான் மகிழ்சியாயிருப்பேன். திரு. மெர்சியர் அல்லது திரு. கோட்த் யாராவது ஒருவர், நீங்கள் எப்பொழுது நேர்காணல் வைத்துக் கொள்ளலாம் என்று தொலைபேசியில் பதிலளிப்பார்கள். அங்கே நமக்கு, மக்களை வரவழைத்து அவர்களுக்கு ஜெபிக்கும்படியாக குளிர்சாதனம் செய்யப்பட்ட இடம் ஒன்று ஆயத்தமாய் இருக்கிறது. அதை செய்வதில் நாம் மகிழ்ச்சியாயிருக்கிறோம். 65இப்போது, நான் சபைக்கு வராததன் காரணம் என்னவெனில், நான் மக்களை விட்டு தூரமாக இருப்பதற்கு முயற்சி செய்வதாக அவர்கள் நினைத்துக் கொள்கிறார்கள், அது அப்படியல்ல. நான் சரியாக ஒழுங்கில் வைக்க முயன்றுக் கொண்டிருக்கிறேன். பாருங்கள‚ அந்த விதமாகத்தான் நான் இருக்க விரும்புகிறேன், எந்த நபருக்கும் பட்சபாதம் காண்பிக்காதவராக. ஒவ்வொரு நபருக்கும், யாராயிருந்தாலும், எந்த இடத்திலும், எந்த நேரத்திலும் பாருங்கள்; நிறமோ, கோட்பாடோ அதோடு செய்வதற்கு ஒன்றுமில்லை. நாங்கள் இங்கே சரியாக வந்து மக்களை சந்திக்கிறோம். அவர்களுக்கு தேவை இருக்குமானால் அது சரிசெய்யப்படும் வரைக்கும் நாங்கள் தேவனோடு தரித்திருக்கிறோம். அவர்கள் கூட்டங்களைப் பற்றி ஏதாவது அறிந்துக் கொள்ளவிரும்புவார்களானால், அதை அவர்களுக்கு தெரியப்படுத்தும்படிக்கு, அந்த விண்ணப்பத்தைப் பத்திரப்படுத்தி எடுத்துவைக்கிறோம். அது வெறுமென பரிசுத்த ஆவியின் வழிநடத்துதலின் படியாக இருக்கிறது. மேலும், அது அந்த வழியில் சரியாக, ஒவ்வொருவருக்கும் ஓரேவிதமாக செய்கிறது என்று நினைக்கிறேன். எனவே, எந்த நபருக்கும் பட்சபாதம் காண்பிக்கப்படுவதில்லை, பட்சபாதம் என்பதே இல்லை. 66வியாதிக்காக ஜெபம்செய்து கொள்ள வேண்டும் என்று இருக்கிறவர்கள் யாராவது இன்று காலை, ஜெபித்துக்கொள்ளும்படி வந்திருக்கிறார்களா? சரி, யாருமில்லை அப்படியென்றால் நாம் ஆராதிக்கும்படிக்கு அந்த அருமையான பாடலை பாடலாம். இந்த காலையில் எந்த பாடலை பாடலாம்? “எது என் பாவத்தை எடுத்து போடும்”? டெட்டி, அது உங்களுக்கு தெரியுமா? இயேசுவின் இரத்தத்தை தவிர வேறொன்றுமில்லை“. (கூட்டத்திலுள்ள ஒரு சகோதரியானவள் மிகவும் வியாதியாயிருக்கிற ஒரு சீமாட்டியை குறித்து சொல்கிறார் - ஆசிரியர்.) சரி ஐயா, இப்பொழுது நான்அவளுக்காக ஜெபிக்கவேண்டுமா?இப்பொழுது அந்த சீமாட்டிக்காக நான் ஜெபிக்க போகிறேன். இங்கே இருக்கிற இந்த ஸ்திரி மீது கரங்களை வைப்போம். இப்பொழுது அமைதியாக என்னோடு கூட உங்கள் தலையை தாழ்த்துவீர்களாக (சகோ. பிரான்ஹாம் பிரசங்கபீட ஒலிபெருக்கியை விட்டு செல்கிறார் - ஆசிரியர்.) 67அன்பான தேவனே, மிகவும் வியாதிப்பட்டிருக்கிற ஒரு சீமாட்டி இங்கே இருக்கிறார். எங்களுடைய சகோதரி மற்றவர்களிடத்திலிருந்து புற்றுநோயை நீக்கும்படிக்கு தன்னுடைய சரீரத்தையும் அர்பணித்து அவர்களுக்காக இடைவெளியில் நின்றார்கள. ஒரு சில நாட்களுக்கு முன்பு அவ்விதமான காரியங்கள் இருப்பது தெரியவந்தது. ஆனால் நீர் அதிலிருந்து அவளை விடுவியும், ஆண்டவரே. அதை அவள் தாமே அறிந்துகொள்ளும்படி செய்தீர். அதினிமித்தம் அது (சுகம்) உம்மிடத்திலிருந்து வருகிறது என்று அவள் அறிந்துகொள்வாள், ஆண்டவரே. நான் என் கரங்களை அவள் மீதாக வைத்து அவள் வேண்டிக்கொள்கிற மற்ற ஸ்திரிக்காகவும் நான் இரக்கத்தை கேட்கிறேன். தேவனுடைய கிருபையும் பரிசுத்த ஆவியின் வல்லமையும்... தேவனே, எங்களுடைய இருதயத்தில் ஏதாவது தீங்கு இருக்குமானால் முதலாவது அதை எங்களுக்கு வெளிப்படுத்தும், அப்பொழுது நாங்கள் போய் அதை சரிசெய்து கொள்வோம். அதன் பிறகு நாங்கள் தேவனிடத்தில் தயைபெற்றும், தேவனோடு சமாதானமுடையர்களாயும் நாம் எதைக் கேட்டுக் கொள்கிறோமோ அதைப் பெற்றுக்கொள்வோம் என்று அறிந்திருக்கிறோம். ஏனென்றால், எங்கள் மேல் ஆக்கினைத் தீர்ப்பு இல்லை.இதை நாங்கள் பெற்றுக் கொள்ளட்டும், கர்த்தாவே. இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென். சரி (சகோ. பிரான்ஹாம் பிரசங்கபீடத்துக்கு திரும்பி செல்கிறார்- ஆசிரியர்.) எது என் பாவத்தை கழுவிடும்? இயேசுவின் இரத்தத்தை தவிர வேறு எதுவுமில்லை; எது என்னை மறுபடியும் முழுமையானவனாக ஆக்கும்? இயேசுவின் இரத்தத்தை தவிர வேறு எதுவுமில்லைƒ ஓ, அதின் பிரவாகம் வில்லையேறப் பெற்றது பனியை போல வெண்மையாக என்னை ஆக்குகிறது; வேறு எந்த ஊற்றையும் நான் அறியேன். இயேசுவின் இரத்தத்தை தவிர வேறு எதுவுமில்லை 68உங்களுடைய எல்லாபாவங்களும் இரத்தத்தின் கீழாக இருப்பதை எத்தனை பேர் உணர்கிறீர்கள்? அப்படியானால் நாம் நம்முடைய கரங்கள் உயர்த்தப்பட்டவண்ணமாக அதைப் பாடுவோம். எது என் பாவத்தை கழுவிடும்? இயேசுவின் இரத்தத்தை தவிர வேறு எதுவுமில்லை; எது என்னை மறுபடியும் முழுமையானவனாக ஆக்கும்? இயேசுவின் இரத்தத்தை தவிர வேறு எதுவுமில்லை; இப்பொழுது நாம் நம்முடைய கரங்களை கீழே இறக்கும் போது நம்மை சுற்றி இருக்கிறவர்களோடு கரங்களை குலுக்குவோம். நம்மை சுற்றி இருக்கிறவர்களோடு கரங்களை குலுக்குவோமாக. ...பனியை போல வெண்மையாக என்னை ஆக்குகிறது வேறு எந்த ஊற்றையும் நான் அறியேன். இயேசுவின் இரத்தத்தை தவிர வேறு எதுவுமில்லை நீங்கள் அவரை நேசிக்கிறீர்களா? (சபையார் ஆமென் என்று சொல்கின்றனர்- ஆசிரியர்) ஓநான் இயேசுவை எவ்வளவாக நேசிக்கிறேன். ஓநான் இயேசுவை எவ்வளவாக நேசிக்கிறேன். இப்பொழுது அதனோடு தரித்திருப்போம், இப்பொழுது, ஒவ்வொருவரும் தேவனைப் பற்றிப் பிடித்துக்கொள்ளுங்கள். நான் இயேசுவை எவ்வளவாக நேசிக்கிறேன் ஏனென்றால் முந்தி அவர் என்னை நேசித்தார் நான் அவரை விட்டுவிடப் போவதில்லை...